பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26



கி. (தன் இடது கரத்தால் அவன் வாயில் அறைந்து) வாங்கிக்கொள் இதை! அதநப்பிரசங்கி !

வி. ஆம் - நான் வாங்கிக்கொள்ள வேண்டியது தான் ஒரு பயங்காளி யிடமிருந்து !

கி. என்ன சொன்னாய் ! (கைத் துப்பாக்கியை உயர்த்தி)

வி. சரி !-சுடு - சீக்கிரம் !

கி. அவ்வளவு அவசரம் வேண்டாம் அப்பா! அந்த இரகசியத்தை உன்னிடமிருந்து வரவழைக்கும் விதம் எங்களுக்குத் தெரியும். ஹெர்மன், அவன் வாயை அடைத்து அந்த மூலையில் கொண்டுபோய் வை.

வி. ஒரு நிமிஷம்-உன்னிடம் மனித சுபாவ மென்பதிருந்தால் - நான் என் தாய் தந்தையர், மனைவி, மகன் இடமிருந்து விடைபெற, எனக்கு உத்திரவு கொடு.

கி. அப்படியே செய்கிறேன் - உன் இரகசியத்தை நீ வெளியிடுவதாக எனக்கு வாக்களிப்பாயானால்.

வி. உம்-உன்னிச்சைப்படி செய் - நான் அவர்களைப் பார்க்க விரும்பவில்லை.

கி. ஹெர்மன் உன் வேலையைப் பார் (ஹெர்மன் விஸ்வ நாதத்தின் வாயைத் துணியால் அடைக்க பிரயத்தனிக்கிறான்).

வி. ஒரு வினாடி - அந்த புஸ்தகத்தை என்னுடன் கொண்டுபோக உத்திரவு கொடு.

கி. அது என்ன புஸ்தகம் ? - என்னை ஏதாவது மோசம் செய்யப் பார்க்காதே !

வி. அதை யெல்லாம் உனக்கும் உன் இனத்தாருக்கும் விடுகிறேன். அது எங்கள் பகவத்கீதை. நீ வருமுன் அதை நான் படித்துக்கொண்டிருந்தேன். நான் சாகு முன் அதை முற்றிலும் படித்து முடிக்க விரும்புகிறேன்.

கி. அவ்வளவு சீக்கிரமாக நீ சாவதற்கு நாங்கள் இடங் கொடுக்க மாட்டோம், அப்பா பிள்ளையாண்டான் !- அந்த புஸ்தகத்தை நான் பார்க்கட்டும். (அந்த புஸ்த-