பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வில்லையா உனக்கு -அதைப் பார்த்துக்கொள் நீயே உடனே-இல்லாவிட்டால் நான் உன்னை தண்டிப்பேன்.

(கடற்படை உத்தியோகஸ்தன் போகிறான்)

ஹெ. இதோ பார் விஸ்வம் - என் கையில் கெட்டியாய் அகப் பட்டுக்கொண்டிருக்கிறாய் - உன் இரகசியத்தை எனக்கு நீ உடனே சொல்லவாவது வேண்டும் - இல்லாவிடின், சில நிமிஷங்களுக்குள் சமுத்திரத்தில் அதோகதியாய் மூழ்கவேண்டும்.

வி. அப்படிச் செய்தால் கொதிக்கின்ற என் உடலை அது குளிரச்செய்யும்.

ஹெ. விஸ்வா, உங்களை யாளுகின்ற வேறொரு தேசத்தார்களுக்காக நீ இவ்வளவு கஷ்டமெல்லாம் ஏன் அனுபவிக்க வேண்டும்? அதை நான் அறிய விரும்புகிறேன்.

வி. ஏனென்றால் -எங்கள் மதத்தின்படி எங்களை ஆள்பவர்களே நாங்கள் தெய்வமாகக் கருதும்படி போதிக்கிறது.

ஹெ. அந்த துரைத்தனம்தான் உனக்கு இத்தனை கஷ்டத்தையும் கொண்டு வந்து விட்டதே ?

வி. இல்லை! அவர்கள் என்னை ஒரு கஷ்டத்திற்கும் ஆளாக்கவில்லை,

ஹெ. பிறகு-யார் செய்தது?

வி.என் கர்மம் !

ஹெ. உன் கர்மம் ? என்ன ஆகாத்தியக்காரர்கள் இந்த இந்தியர்கள் ! - உங்களுக்கு நேரிடுவதற்கெல்லாம் சமாதானம் சொல்ல இந்த இரண்டு பதங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் !-ஸ்வாமி!-கர்மா !

வி.ஆமாம்.

ஹெ.சரி ! உன் விஷயத்தை நீ விடப்போகிறதில்லை! -ஆனால் உன்னால் எவ்வளவு கோரமான சாவைப்பற்றி எண்ண முடியுமோ அப்படிப்பட்ட மரணத்திற்கு உள்ளாக ஆயத்தப்படு! நீ நேற்றிரவுபட்டது எல்லாம் அதன் முன்பாக ஒன்றுமில்லாததாம் !