பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


.ே இந்தியனும் - ஹிட்லரும் முதல் அங்கம் முதல் காட்சி இடம்-திரு ஒற்றியூர்க் கடற்கரை யோரம். காலம்-விடியுமுன், புதிதாய்க் கட்டப்பட்ட பல சாமான்கள் கிறைந்த ஓர் வீட்டின் அறை. இதன் ஒரு புறம் பலவிதமான புதிய ரசாயன யந்திரங்கள் நிறைந்திருக்கின்றன. அறையின் மத்தியில் ஒரு மேஜையைச் சுற்றி மூன்று நான்கு நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. ரசாயன யந்திரங் களுக் கெதிரில் இருக்கும் மற்ருெரு சிறு மேஜையின் முன், கையில் ஒரு ரசாயனக் குழலுடன், விஸ்வநாதன் கின்று கொண்டிருக்கிருன். அறையின் மற்ருெரு பக்க முள்ள பலகணி ஒரு திரையால் மூடப்பட்டிருக்கிறது. வி, உம் ! (கையிலிருக்கும் குழலைக் கலக்கிப் பார்த்து) இன்றைத்தினம் இதன் சூட்சுமத்தைக் கண்டு பிடிப் பேன் என்று, எனக்குள் ஏதோ சொல்கிறது! இந்த இரகசியக்கை மாத்திரம் நான் கண்டு பிடிப்பேயிைன், இந்த பாழாய்ப்போன யுத்தத்தை, அடியோடு உலகி னின்றே ஒழித்து விடுவேன்! - (கதவைத் தட்டுகிற சப்தம்) வி. ஆ | மறுபடியும் கதவைத் தட்டுகிறர்கள்!-இந்த ஒரு இரவாவது என்னைத் தொந்திரவு செய்யாமல் விடமாட் டார்களா? (பூட்டப்பட்டிருக்கும் கதவருகில் போய்) இப்பொழுது யார் கட்டுகிறது? (வெளியிலிருந்து வேலைக்காரியின் குரல்-கொஞ்சம் காபியாவது சாப்பிடுகிறீர்களா என்று அம்மா கேட்கச் சொன்னர்கள்)