பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6

வி. ஓ ! நான் சாத்திரி போஜனம் கொண்டேனா?-(பல கணியருகில்போய் அதை மூடியிருக்கும் திரையைத் தள்ளிப்பார்த்து)- ஓ! பொழுது விடிந்து விட்டதா!- ஹீம்! காபியைக் கொஞ்சம் பொறுத்து அனுப்பச் சொல்-இப்பொழுது அவசரமில்லை. கொஞ்ச நேரம் வரையில் என்னே ஒருவரும் தொந்திரவு செய்ய வேண்டாம். (மேஜையருகில்போய் அந்த ரசாயனக் குழாயில் ஏதோ திராவகத்தை விட்டுப் பரிசோதிக்கிறான்.

(கதவண்டை சிறு கையால் தட்டுகிற மெல்லிய சப்தம்)
 

வி. பாழாய்ப்போக! -நான் கதவைத் திறக்கமாட்டேன் -இந்தப் பரீட்சையில் கான் ஜெயமடையும் காலம் சமீபிக்கும்போது

(கதவு பக்கமிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல்)
 

வி. என்ன அது ?-என் பையனா அழுகிறான்! ஏன் அழுகிறான் அவன் ? (கதவைத் திறந்து பார்த்து) என்ன சமாசாரம் கண்ணா?-ஏன் அழுகிறாய் நீ?

க. என் புஸ்தகம் வாங்க அம்மா ரூபா கொடுக்கமாட்டேன் இண்ராங்க (அழுகிறான்) அவுங்ககிட்ட புஸ்தகம் வாங்க பணமில்லையாம் -

வி. கண்ணா-அழாதே கண்ணு - உனக்கு சீக்கிரம் ரெண்டு புஸ்தகம் வாங்கப் பணம் தருகிறேன். என் கண்ணல்ல போ-இப்பொழுது என்னேத் தொந்திரவு செய்யாதே (கண்ணன் போய்விடுகிறான்).

இந்தப் பணம் பாழாய்ப்போக! இந்த பணம் என்பதை இந்த உலகில் ஏன் உற்பத்தி செய்தார்கள் ! (ரசாயனப் பரீட்சையை நடத்துகிறான்.)

(வெளியில் கதவைக் தட்டுகிற உரத்த சப்தம்)
 

(வெளியிலிருந்து) தபால் சார்!

வி. போ வெளியே! ஒரு கடிதமும் வேண்டாம். இன்றைக்கு என்ன தொந்திரவு செய்ய!