பக்கம்:இந்தியப் பெருங்கடல்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3


சிறப்பாக, அதில் காணப்படும் பவழ மலைத் தொடர்கள் சிக்கலான அமைப்புடையவை. அதன் தென்கிழக்கு, தென்மேற்குப் பகுதிகளைத் தவிர, எஞ்சியவை நிலத் தொகுதியால் சூழப் பட்டவை. அதன் தென் கோடியில் பனிக்கட்டிகளும் பனிப்பாறைகளும் காணப்படுகின்றன.

நீரோட்டங்கள்

இந்தியக் கடலில் காணப்படும் நீரொட்டங்கள் பசிபிக், அட்லாண்டிக் கடல்களில் காணப்படும் நீரோட்டங்கள் போன்று அவ்வளவு விரைவும், வலிமையும் கொண்டவை அல்ல. அதன் மேற்பரப்பு கிழக்காகச் சாய்ந்துள்ளது. மற்றக் கடல்கள் மேற்காகச் சாய்ந்துள்ளன. ஒரு கோடியில் மட்டும் திறந்துள்ள ஒரே பெருங்கடல் இதுவே.

அதில் காணப்படும் முக்கிய நீரோட்டங்களாவன: நிலநடுக்கோட்டு நீரோட்டம், மொசாம் பிகுயு நீரோட்டம், அகுலாஸ் நீரோட்டம்.

வளம்

இந்தியக் கடலின் இயற்கை வளம் மதிப்பிடற்கரியது. உலகக் கடல்களிலேயே அதிக அளவுக்குப் பலவகை உயிர்ப் பொருள்கள் உள்ள கடல் இதுவாகும். அதன் மீன் வளம் நிறைவான பொருள் வளத்தை அளிக்கவல்லது. தவிர, அதன் கனிவளமும் மதிப்பிடற்கரியதே. அதன் வாணிப வளமும் வரலாற்றுச் சிறப்புடையதே.