பக்கம்:இந்தியப் பெருங்கடல்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

சிறப்புடைய மீன்களை ஆராய்ந்த வண்ணம் உள்ளன.

கருவிகள்

பொதுவாக, இந்தியாவில் கடல் ஆராய்ச்சிக்குப் பயன்படும் கருவிகளாவன:

நீர் வெப்பநிலை வரைவி

இது கடலில் பல இடங்களில் வெப்பநிலை மாற்றங்களைச் செங்குத்தாகப் பதிவு செய்யும்.

நேன்சன் சீசாக்கள்

விரும்பிய ஆழங்களில் கடல் நீரை எடுத்து, அதன் உப்புத் தன்மை, இயைபு ஆகியவற்றை ஆராய இவை பயன்படும்.

நீரோட்ட அளவுமானி

கடலில் விரும்பிய இடத்தில் நீரோட்ட அளவைக் கணக்கிட இது உதவும்.

மாதிரி எடுக்கும் கருவிகள்

கடலின் அடியிலுள்ள படிவுகளை மாதிரி எடுப்பதற்கு இவை பயன்படும். மாதிரிகளை வேறுபட்ட ஆழங்களில் எடுக்கலாம்.

வலைகள்

கடல் உயிர்களைப் பிடிப்பதற்கு இவை பயன்படும்.