பக்கம்:இந்தியப் பெருங்கடல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

கதிர்வீச்சைக் காணும் முறையினை வானிலை அறிஞர்கள் வகுக்க இயலும்.

கதிரியக்க வீச்சின் அளவு

1966-இல் நடைபெற்ற சோவியத்து ஆராய்ச்சியின் கோக்கம், செயற்கை இயற்கைக் கதிரியக்க வீச்சுக்களை ஆராய்ந்து, அவை கடல் நீரிலுள்ள தாவரங்களையும், விலங்குகளையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கண்டறிவதாகும். இவ்வாராய்ச்சியின்படி இந்தியக் கடலின் கதிரியக்க வீச்சின் அளவு அதிகம் என்பது அதிர்ச்சி தரக்கூடிய உண்மையாகும். இஃது அட்லாண்டிக் கடலில் உள்ளதைவிட 3 மடங்கு அதிகமாகும். பசிபிக் கடலில கடந்த அணு ஆயுத ஆய்வுகளின் விளைவாக விழுந்த கதிரியக்கத் தனிமங்களின் கழிவுகள், இந்த உயர்வுக்குக் காரணமாகும். அட்லாண்டிக் கடல், இந்தியக் கடல் ஆகியவை மீன்வளம் மிக்கவை. இவ்வளத்தை இக்கதிர்வீச்சு அதிகம் பாதிக்கும்.

குறைந்த அளவு ஆக்சிஜன்

அரபிக்கடல் நீரில் குறைந்த அளவு ஆக்சிஜன் இருப்பது ஜெர்மானிய ஆராய்ச்சியால் வெளியாகியுள்ள உண்மையாகும். இந்நிலை பம்பாயிலிருந்து 150 மைல் தொலைவுவரை உள்ளது. பொதுவாகக் குறைந்த அளவு ஆக்சிஜன் காணப்படும் பகுதிகள் இந்தியக் கடலில் உள்ளன. இதுபோன்று உலகின் வேறு எந்தக் கடலிலும் இல்லை.

வெப்பத் துளைகள்

செங்கடலில் 780 மீட்டர் ஆழத்தில் இரு வெப்பத் துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.