பக்கம்:இந்தியப் பெருங்கடல்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

கரை வழியாகச் சென்று ஒரு தடவை மீன் பிடித்ததில் 45 நிமிடத்தில் 3 டன் மீன்கள் -கிடைத்தன: உணவுப் பஞ்சத்தை நீக்க, இவ்வளத்தை நன்கு பயன்படுத்தி இந்தியா வழிவகை காணவேண்டும். தவிர, இந்தியக் கடலில் 80 புதியவகை விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கனி வளம்

1872-ஆம் ஆண்டிலேயே இந்தியக் கடலில் மாங்கனிஸ் முண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1962-64-இல் நடந்த இந்தியக்கடல் ஆராய்ச்சியும் இதனை உறுதிப்படுத்தியது. இவை சிறிய உருண்டைகளிலிருந்து பெரிய திரள்கள் வரை உள்ளன. இவை இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் தெற்கே 4000-5000 மீட்டர் ஆழத்தில் உள்ளன; கடலின் அடியில் ஆண்டுதோறும் 10 மில்லியன் டன்கள் உண்டாகின்றன. இவற்றில் மாங்கனிஸ், செம்பு, நிக்கல், மாலிப்டினம் முதலிய உலோகங்கள் உள்ளன.

மேற்குக் கடற்கரையில் ஊட்டச்சத்து மிகுந்த கரிமப்படிவுகளும், பாஸ்பேட் படிவுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை சிறந்த உரமாக அமைந்து, வேளாண்மைத் துறைக்கு அதிகம் பயன்படும்.

இந்தியக் கடல் தரை செங்களிமண்ணில் 220 டிரில்லியன் டன் அலுமினியமும், 650 டிரில்லியன் டன் இரும்பும், 73 டிரில்லியன் டிட்டானியமும், 15 டிரிலலியன் டின், வெனாடியம், கோபால்ட்,