பக்கம்:இந்தியப் பெருங்கடல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

பெறுவது இமாலயப் பகுதிகள் ஆகும். இப்பகுதிகள் இல்லை எனில் உண்மைப் பருவக் காற்றும் இல்லை. பருவக்காற்றுச் சுழற்சியில் இமாலயப் பகுதிகளின் வெப்ப விளைவுகளும், இயக்க விளைவுகளும் சிறந்த இடத்தைப் பெறுகின்றன. இவ்விரு உண்மைகளை இதுகாறும் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

பருவக்காற்று முன்னரே உண்டாவது கோடையில் திபேத்தியச் சமவெளி வெப்பமடைவதால் என்பதும் மற்றும் ஒரு காரணியாகும்.

பங்குபெறும் நாடுகளும் நிறுவனங்களும்

இத்திட்டத்திற்காக இந்திய அரசு 25 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்திய வானிலை ஆராய்ச்சி வரலாற்றில் இது பெரிய ஆய்வு ஆகும். இதனை இந்தியா, உருசியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் நடத்துகின்றன.

இத்திட்டத்தில் கலந்துகொள்ளும் இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் பின்வருமாறு. பம்பாய் பாபா அணு ஆராய்ச்சி மையம், பம்பாய் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சிக் கூடம், ஹைதராபாத் தொலையிட அறிநிலையம்.

நடைபெறும் முறை

சோவியத்துக் கப்பல்கள் கடல் உற்று நோக்கல்கள், வானிலை உற்று நோக்கல்கள் முதலியவற்றை நடத்தும். இவை தம் பணியைத் தொடங்கி உள்ளன. தென்மேற்குப் பருவக்காற்றை உரு-