பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

எஸ். நவராஜ் செல்லையா


251 வெற்றி எண்கள் எடுப்பது என்பது எளிதா என்ன ? இராக் குழுவின நாமும் பாராட்டுவோம் ! எட்டிப் பார்த்த எட்டு தன் நாட்டைவிட்டு வேறு நாட்டுக்கு விளையாட வந்த பெருமை-ஒரு சிறுமிக்குக் கிடைத்தது. ஆமாம் ! எட்டு வயது சிறுமி அவள். பிறந்த தேதி 5.11.19 : 4. ஆசியப் போட்டியில் கலந்து கொள்ள வந்த அத்தனை வீரர்கள் வீராங்கனேகளிலும், மிகச் சிறியவள் என்ற பெருமையைப் பெற்ற அந்த சிறுமியின் பெயர் அகமிஅல்ஷராபி. யேமன் நாட்டைச் சேர்ந்தவள். அந்த நாட்டின் மேசைப்பந்தாட்ட ஆட்டத்தில் நான் காவது வரிசையில் உள் ள அந்த பெண்-விளையாடும் மேசை உயரம் தான் என்ருல், அந்தப் பெண் விளைவித்த ஆற்றல்அத்தனை பார்வையாளர்களையும் ஆச்சரியத்தில் அல்லவா ஆழ்த்தி விட்டது : எட்டு வயதில் இந்தத் திறமை வந்திருக்கிறது என்ருல், எந்த வயதில் பயிற்சியை ஆரம்பித்திருக்க வேண்டும் ? அவளது அரிய முயற்சியும், அளவிலா பயிற்சியும், விளேயாட் டுத்தன மில்லாத கட்டுப்பாடான உழைப்புமே அவளை இந்த இனிய புகழுக்கு ஏற்றி வைத்திருக்கிறது ! வாழ்க வளமுடன், பெறுக புகழ்மிகுந்த எதிர்காலத்தை' என்று நாமும் வாழ்த்துவோமே !