பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

107


பதக்கம். இரண்டு ஒட்டப் போட்டிகளில் இதுவரை யாரும் வெல்லாத சாதனை. இந்த அற்புத சாதனையைப் புரிந்தவள் ஜப்பானைச் சேர்ந்த வீராங்கன. ஹிரோமி இசோகி என்பது பெயர். பத்தாவது படிக்கின்ற பள்ளி மாணவி. இத்தகைய திறமையும் தேர்ச்சியும் இவளுக்கு எப்படி வந்தது : 8 ஆண்டுகளாக, தினம் தவருமல் 2 மணிநேரம் செய்து வந்த பயிற்சிதான். விடாமுயற்சி வென்றிருக்கிறது ! உண்மையான உழைப்பு தோற்றதாக சரித்திரமே இல்லை ! ண்ைபு விளைவித்த மாணவர்கள் நமது நாட்டு வீரர்கள், வீராங்கனேகள் அனைவரையும் எடுத்துக் கொண்டால், அத்தனைபேரும் வேலையில் இருந்து பணியாற்றுபவர்கள் தான். 20 வயதை அநேகமாகக் கடந்தவர்கள். - இங்கே மாணவர் உலகம் என்ன செய்கிறது ? என்று கேட்பாரும் இல்லை. பார்ப்பாரும் இல்லை. ஆவன செய்து ஆக்கபூர்வமான பணிகளேத் தருவாருமில்லை. ஆசிய விளையாட்டுப் பூப்பந்தாட்ட அணியில் இடம் பெற்றிருந்த 15 பேர்களில் 14 பேர் மாணவர்களாவார்கள். கிறிஸ்டி ധങ്ങ് ഉു. தாதா என்பவரின் வயது 88. மற்றவ: கள் எல்லாம் இளமை ததும்பும் ஆற்றல் உள்ளவர்கள்.