பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l ஆசிய விளையாட்டுக்களின் வரலாறு உலக நாடுகள் அனைத்துக்கும் இடையிலே, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் கழகத்தினரால் குறிப் பிட்டுத் தரப்பட்டுள்ள ஓர் இடத்தில் நடைபெறும் புகழ் பெற்ற பந்தயங்களுக்கு ஒலிம்பிக் பந்தயங்கள் என்று பெயர் ஆசிய நாடுகளுக்கிடையே, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆசிய விளையாட்டுக் கழகத்தினரால், குறிப் பிட்டுத் தரப்பட்டுள்ள ஓர் இடத்தில், நடைபெறும் விளை பாட்டுப் போட்டிகளுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்பது பெயராகும். இரண்டு போட்டிகளும், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற போட்டிகள்தான். ஆனல் ஏன் இந்த ஆசிய அளவிலான போட்டிகள் இடம்பெற வேண்டும் ? உலக அரங்கில்தான் ஒரு ஒப்பற்ற போட்டி நடைபெறுகின்றதே ? தனியாக எதற்கு என்ற ஒரு கேள்வியை நீங்கள் எழுப்பலாம். அது நியாயமான கேள்விதான். அதற்கான விடை யினைத் தேட வேண்டுமென்ருல், நாம் கொஞ்சம் பின்