பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. எஸ். கவராஜ் செல்லையா அவர்கள் தமிழ் இலக்கியத்தில் விளையாட்டுத் துறை நூல்கள் அதிகமாக வெளிவர வேண்டும் என்ற முயற்சியில், இதுவரை 80-க்கும் மேற்பட்ட நூல்களையும். 20-க்கும் மேற்பட்ட கதை. கவிதை, நாடக நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கிருர், இவர் எழுதிய ஒலிம்பிக் பந்தயத்தின் கதை' எனும் நூல் 1977ம் ஆண்டும், விளையாட்டுக்களின் கதைகள்' எனும் நூல் 1981ம் ஆண்டும் தேசிய விருதினப் பெற்றிருக் கின்றன. தமிழிலும், உடற்கல்வித் துறையிலும், முதுகலைப் பட்டம்(M. A., M. P. Ed.,) பெற்றுள்ள ஆசிரியர் வானுெலி, டெலிவிஷன், வாரம் மற்றும் மாதப் பத்திரிகைகளில் தொடர்ந்து விளையாட்டுத் துறை பற்றி பேசியும் எழுதியும் வருகிருர், தமிழில் முதன் முறையாக விளையாட்டுக்களஞ்சியம்' எம்ை விளையாட்டுத் துறை மாத இதழைத் தொடங்கி 1977 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்திப் பணியாற்றி வருகிார். கிரேஸ் பிரிண்டர்ஸ், 27, அப்பா ரெட்டி தெரு, சென் இன.38.