பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

37


ஜப்பான் 5வது முறையாக அதிகப்பதக்கங்களே வென்றது மட்டுமல்ல; ஒவ்வொரு விளையாட்டுப் போட்டி யிலும் அதிக எண்ணிக்கையில் தங்கப்பதக்கம் பெறுவதுடன் அடுத்து வரும் நாட்டின் பதக்கங்களுக்கு எட்டாத உயரத்தில் இருப்பது தான் அதன் சிறப்பான பெருமையாக விளங்கி வருகிறது. பெற்ற வெற்றி இடத்தைப் பெரிதும் காத்து, விடாமல் வெற்றி பெறும் வித்தையை ஜப்பான் எப்படித்தான் கடை பிடித்து வருகிறது என்பதை நம்மவர்கள் கண்டறிந்து, பயிற்சி முறையை வேறுபடுத்தி, பலப்படுத்திக் கொள்ளத் தவறிய காரணத்தால். நமது நிலையை விட்டு உயராத நிலமையை நாம் அடைந்து வருகிருேம்,