பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ஏழாவது ஆசிய விளையாட்டுக்கள்-1974 இதுவரை நடைபெற்ற ஆறு ஆசிய விளேயாட்டுப் போட் டிகளும் கிழக்காசிய நாடுகளிலேயே நடைபெற்று வந்தன. மேற்கு ஆசிய நாடுகள் எதுவும் போட்டிகளே நடத்திட இணக்கம் தரவும் இல்லே. மகிழ்ச்சியுடன் முன் வரவும் இல்லை. அதிக விளையாட்டுப் பற்று மிகுந்த நாடாக விளங்கிய இரான் நாடு, தாமாக முன் வந்து, சம்மதம் தந்து, ஆசியப் போட்டிகளே நடத்திட ஆயத்தமானது. 1974ம் ஆண்டு இரான் தலைநகரான டெஹ்ரான் நகரில், நிறைந்த பொருட்செலவில் நடத்தப்பெற்றன. 25 நாடுகள் போட்டியிட வந்து கலந்து கொண்டன. ஏறத்தாழ 8000 வீரர்கள் வீராங்கனைகள் ஆடுகளங்களிலும் ஒடுகளங்களிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் போட் டிகளில் வீராவேசமாகக் கலந்து கொண்டனர். 18 திகழ்ச்சி களில் போட்டிகள் நடந்தன. விருந்துாட்டி விளேயாட்டு விழா நடத்தும் நாடான இரானிலிருந்து 400 பேர்களும். ஜப்பானிலிருந்து 870 ம். சீகுவிலிருந்து 274 பேர்களும் கலந்து கொண்டனர்.