பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4



4 இதுவரை 8 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பற்பல நாடுகளில் உள்ள தலைநகரங்களில், மிகவும் பிரபலமாகவும், பிரமாண்டமான பொருட் செலவிலும், பரபரப்பான சூழ்நிலை. களிலும் நடத்தப் பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட வரலாற்றுக் குறிப்புக்களே, இது வரை தடைபெற்ற எட்டு ஆசிய விளையாட்டுக்கள் என்ற தலைப்பில், நடந்து முடிந்த வரலாற்றுப் பெருமை மிக்க முக்கியமான குறிப்புக்களைத் தொகுத்து சிறப்பாகக் கொடுக்கப்பட்டிருக் கின்றன. ஆசிய விளையாட்டுக்களில் பங்கு பெற்ற நாடுகளின் எண்ணிக்கை; பங்கு பெற்ற வீரர்கள், வீராங்கனைகளின் எண்ணிக்கை; போட்டிக்குரிய போட்டி நிகழ்ச்சிகள்: போட்டி தடைபெற்ற நாட்கள்; போட்டியைத் தொடங்கி வைத்த முக்கியமானவர்கள், ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற்று முதல் வரிசையில் நின்ற நாடுகள், அவைகள் பெற்ற வெற்றிப் பதக்கங்கள் என்பன போன்ற குறிப்புக்கள் எல்லாம் விரிவாகத் தரப்பட்டிருக்கின்றன. ஒன்பதாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்கிற தலைப்பிலே, இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் பற்றிய அற்புதமான நிகழ்ச்சிகளையெல்லாம் முடிந்தவரையில் கொடுத்திருக்கிருேம். இதுவரை எங்கும் நடை பெருத அற்புதமான ஆரம்ப விழா, அதற்கான ஆடுகளங்கள், விகளயாட்டு அரங்கங்கள் விரிவான அணுகு முறைகள், வித்யாசமான சூழ்நிலைகள், விளக்கமான போட்டி நிகழ்ச்சி முறைகள், விவரங்கள்." விறுவிறுப்பான நிகழ்ச்சிப் பட்டியல்கள் என்றெல்லாம்: உற்சாகத்துடன் படிக்கத் தக்க வகையிலே, செய்திகளை சேர்த்து எழுதியிருக்கிருேம்.