பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5



昶 இவ்வளவு எழுச்சி மிக்க ஒரு விளையாட்டுப் போட்டி யானது ஏழைநாடான இந்திய நாட்டிற்குத் தேவையா என்றெல்லாம் ஏராளமானவர்களின் வாயிலிருந்து எழுந்து எழுந்து வந்த ஏரா மான கேள்விகள் - ஒரு அதிசயமான சூழ்நிலையையும் அசாதாரணமான பிரச்சினைகளையும் ஏற்படுத்தத்தான் செய்தன. விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்காகச் செய்யப் படுகின்ற செலவுகள் அனைத்தும் வீண் என்று பலர் கருதுவது அவர்களது அறியாமையையே காட்டுகிறது என்று: பல அறிஞர்கள் கூறுகின் ருர்கள். ஒரு நாட்டுக்கு அழகு, வலிமை, பெருமை என்பது அந்த நாட்டில் உள்ள ஆறுகள், மலைகள், வயல்கள், மரங்கள் காடுகள் மட்டும் அல்ல. அந்த நாட்டில் வாழும் வலிமையான விக்கள் வாழும் வளமான சமுதாய அமைப்பு தான் எல்ல' புகழுக்கும் பெருமைக்கும் காரணமாகும். வலிமையற்ற மக்கள் வாழும் நாடு சாபக் கேடானது: என்கிற வாசகம் உண்மையானது தான். இரண்டாம் பெரும் போரில் குண்டு விழுந்து முழுதும் அழிந்து போன ஜப்பான் நாடு, உழைப்பிலே பெற்ற முன்னேற்றத்தால் தான், இன்று உலக நாடுகளுக்கு இணையாக, உன்னதமான இடத்திலே, முதல்தரமான வரிசையிலே முன்னணி பெற்று விளங்குகிறது. அந்த நாட்டு வீரர்களின் வலிமையால் தான் அந்த தாடு அற்புத முன்னேற்றம் பெற்று விளங்குகிறது. அந்த தாட்டின் வெற்றிக்குக் காரணம்-வலிமையான மக்கள் வாழ்வதால் தான், _* வலிமையான மக்களை உருவாக்கக் கூடிய வாய்ப்பையும். வசதியையும் வழங்குவது விளையாட்டுக்கள் த ன். விளையாட்டுக்கனால் தான் ஒரு நாடு வீறு பெற்று விளங்கு. கிறது.