பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

எஸ். நவராஜ் செல்லையா


ஜனதிபதியின் 81வது குதிரை காவல் படையினைச் சேர்ந்த 32 குதிரைகளும், அவற்றை ஒட்டிய வீரர்களும், மிக நேர்த்தியான வீர தீர நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்திக் காட்டினர் கள். குதிரைகள் எந்தவிதமான தயக்கமும் இன்றி, ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கி நடை பிறழாது, லயம் தவருது கோணுது நடந்து கொண்டன என்ற காட்சி, காண்போர் களை வியந்து, தங்களே மறந்து பாராட்டவைத்தன. பாண்டு வாத்தியக் குழுவினர்கள், இசையை இசைத்துக் கொண்டே, இம்மியும் பிசகாமல் அணி நடை நடந்தும், வெவ்வேறு பாணிகளில் வியூகம் அமைத்து நடந்ததும், AsIAD 8.2 என்பதாக நின்றதும், கண்கொள்ளாக் காட்சி யாக அமைந்திருந்தது. வியந்து மகிழ்ந்து இருந்து 72000 பார்வையாளர்கள் மத்தியிலே, உள் ளத்தை உருக்கும் நிகழ்ச்சி ஒன்றும் நடந் தேறியது. நாட்டுக்குள்ளே இருந்து வந்த ஒரு சூழ்நிலை மாறி, அழ கான காட்டுக்குள்ளே தான் வந்து விட்டோமா என்கிற உணர்வினை உசுப்பி விடும் வகையிலே, சிங்கங்களும், பசுக் களும் பறவைகளும், மயில்களும், காளைகளும் சுற்றிச் சூழ்ந்து நடனமாடி வர: ஒரு வாகனத்தில் வண்ண மலர்களால் உரு வான 'அப்பு அரங்கத்தில் நுழைந்தது. "அன்புள்ள அப்புவே ! உனக்கு நன்றி ! சென்றுவா . என்ற வாசகம் மின்னணு காட்சிப் பலகையில் மின்னிக் கொண்டிருந்தன. துள்ளும் துடிப்புடன் காட்சியளிக்கும் அப்புவின் கண் களில், பிரிவாற்ருமை தாங்காது கண் கலங்கும் அமைதியான முகபாவத்துடன் அப்புவை உருவாக்கியிருந்தார்கள். அந்தக் காட்சி அனைவரையும் ஓர் இனம் புரியாத சோகத்தில் ஆழ்த்திவிட்ட தென்றே கூறலாம்.