பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

95


ஆசியப் ோட்டியில் தங்கப்பதக்கம் பெற்றது போலவே வரப் போகின்ற ஒலிம்பிக் பந்தயத்திலும் தங்கம் வெல்வது என்பது தான். ஆசியப்போட்டியில் வெற்றி பெறும் இலட்சியத்திற்காக அந்தப் பெண் செய்த பயிற்சி.8 ஆண்டுகளாகத் தொடர்ந்து தினந்தோறும் 4 மணி நேரம் இடை விடாத பயிற்சி தான். முயற்சியில் குன்றினல் முன்னேற்றம் ஏது? எண்ணத்தில் மாறினுல் இலட்சியம் தான் ஏது ? தோற்பதிலும் சாதனை மகளிர் வளைகோல் பந்தாட்டத்தில் ஹாங்காங் அணி ஒரு சாதனை செய்திருக்கிறது . ஆமாம் ! எதிர்க்கும் அணிக்கு கோல் போட முடியாக அந்த அணி. 3 முறை போட்டியிட்டு மொத்தம் 86 கோல் வாங்கியிருக்கிறது. எப்படிப்பட்ட திறமை இந்த அணிக்கு ? வயது என்ன செய்யும் ? உலகக் கால் பந்துக் கோப்பைக்கான போட்டியில் வென்ற இத்தாலி நாட்டு அணியின் தலைவன் டினே ஜாப்க்கு வயது 40 என்கிருர்கள். இந்த வயதிலுமா விளையாட்டு என் ருர்கள். ஆணுக்குப் பெண் சளைத்தவர்கள் அல்லர் என்று வயது விஷயத்திலும் விளையாட வந்து சாதனை செய்திருக்கிருர் ஒரு பேண்மணி.