உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெற்றது வரையிலே இந்தியாவின் முழுமையான சரித்திரத்தை எழுதிய யாரும், அந்த நூலில் தமிழகச் சம்பந்தப்பட்ட அத்தியாயங்களை ஐந்தாறு வரிகளிலோ, அல்லது சற்றுப் பரந்த உள்ளம் படைத்தோர் ஐந்தாறு பக்கங்களிலோ குறிப்பிட்டார்களே தவிர, தமிழ் நாட்டுக்கு உரிய இடத்தை வழங்கினார்களில்லை! ய இந்தியாவின் மற்ற போகட்டும்! இந்திய நாடு 1947இல் விடுதலை பெற்ற பிறகு இந்திய அரசியல் அரங்கில் மாநிலங்களைப் போலவேதான் தமிழ் மாநிலமும் தலையாய பங்கு வகிக்கிறது என்றாலும், இன்னமும் இந்த மாநில வரலாறு இருட்டடிப்புக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறது. செய்திகள் எல்லாம் வரலாறாகி விடுவதில்லை என்றாலும், இன்றைய செய்திதான் நாளைய வரலாறாக உருவெடுக்கிறது என்பதை மறந்துவிட முடியாது. செய்தித்துறையில் உள்ள ஆதிக்க வர்க்கத்தினரால் உண்மைச் செய்திகள் உருக்குலைக்கப்படலாம். இந்தச் செய்தியேகூட வரலாறாக உருவாகக் கூடியது தானே! நீதிக் கட்சியின் தோற்றம் இன்றைக்கு அறுபது ஆண்டு கட்கு முன்பு தென்னகத் தில் நீதிக் கட்சி தோன்றியது. அது ஆங்கிலேயர் அரசை ஆதரித்தது என்று பொதுவான ஒரு குற்றச் சாட்டைச் சுமத்துவதின் மூலம், அந்தக் கட்சியின் கொள்கை, குறிக்கோள், அந்தக் கட்சியினர் ஆட்சி நடத்தியபோது கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சமுதாயத்துக்குச் சமநீதி வழங்குவதற்காக அந்தக் கட்சியும் அதன் ஆட்சி யும் புரிந்த புகழ்மிக்க சாதனைகள். அனைத்தையும் மறைத்து விடுகிற ஆதிக்க வர்க்கம் தனது கொட்டத்தை இன்னமும் நிறுத்திக் கொள்ளவில்லை.