________________
10 அழகிரிசாமி, மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார், திருவாசகமணி பாலசுப்பிரமணியம், சௌந்திரபாண்டியனார், தமிழ்த்தென்றல் திரு.வி.க. முதலியவர்களால் நடத்தப்பட்டதையும் திராவிடர் இயக்கத்தின் தொடர் பயண நிகழ்ச்சியென்றே கொள்ள வேண்டும். ய 1938-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் அங்குலம் அங்குலமாக இந்தி மொழி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்திடத் தவறவில்லை. வடக்கேயுள்ள இந்தி மொழி ஆதிக்கம் மட்டுமல்ல, சுதந்திரத்தின் பயனை அனுபவிக்கிற வாய்ப்பும் அங்கே தான் நிரம்ப இருந்தது; பெருகிக் கொண்டும் இருந்தது. வடக்கு வாழ்வது? தெற்கு தாழ்வதா? என்ற எழுச்சியும் ஏக்கமும் கலந்த கேள்வி, திராவிடர் கழகத்தின் நாட்டுப் பிரிவினை முழக்கத்தின் எதிரொலியாகக் கிளம்பியது. இந்தியைத் திணிப்பதில் முனைப்புக்காட்டினால், நாட்டுப் பிரிவினையைத் தடுக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட நேரு அவர்கள், "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகிற வரையில் வரையில் ஆங்கிலம் நீடிக்கும்” என்ற உறுதிமொழியை வழங்கினார். அந்த உறுதி மொழியின் பின்னால், தமிழர்களின் கல்லறைகள் இருக் கின்றன. தமிழர் வடித்த குருதி ஆறெனப் பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்திப் பெருவெள்ளம் பிற மாநிலங்களிலும் பெருக்கெடுத்து, இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களையும், கலாச்சாரங்களையும், அழித்து மண்மேடிட்டுப் போகும்படி செய்யாமல் அணை போட்டுத் தடுத்த பெருமை தமிழ் நாட்டுக்குத்தான் உண்டு. திராவிடர் கழகம், சமுதாயத்துறையில் தொடர் பணியாற்றவும், அரசியல் பொருளாதாரத் துறையில்