உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 ஒப்பந்தம் எனக் கூறப்பட்டாலும்கூட, தமிழ்நாட்டு மக்களின் கருத்தையோ, அரசின் கருத்தையோ அறியாமல் அந்த ஒப்பந்தம் நிறைவேறியதால் இலங்கைத் தமிழர்கள் அவதிக்கு ஆளாயினர். கள், இலங்கைத் இலங்கையில் குடியுரிமை பெற்றவர்கள், பெறாதவர் தமிழர்கள் - இந்த மூன்றுவகைத் தமிழர்களுக்குமே சிங்களவர்களால் நேர்ந்த இன்னல் சொல்லத் தரமன்று. இலங்கைத் தமிழர் பிரச்னை இலங்கையில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப் பட்ட போதெல்லாம் தமிழ்நாட்டில், தமிழர்களின் உணர்வைத் திரட்டிக் காட்டிய பெருமை தி. மு. கழகத்திற்கு உண்டு. 1961-ல் அண்ணா தலைமையில் சென்னையில் இலங்கைத் தமிழர்களுக்காக நடந்த பேரணியும் 1977-ல் தி. மு. க. நடத்திய பேரணியும் உலகில் எந்தப் பகுதியில் தமிழர் களுக்கு ஊறுநேர்ந்தாலும் இங்குள்ள தமிழினம் துடித் திடும் என்பதற்குச் சான்றாகும். பாகிஸ்தான் இந்தியா மீது நடத்திய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, எதிர்த் தாக்குதல் நடத்தி வெற்றி கண்ட இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமாதானப்படுத்த சோவியத் ரஷ்யா முயற்சி எடுத்து தாஷ்கண்டில் ஒப்பந்த மும் ஏற்பட்டது. ஆனால் லால்பகதூர், தாஷ்கண்டிலேயே காலமானார். அவருக்கு அடுத்து பிரதமர் யார்? விழுந்தது. காமராசர், அந்தப் பிரச்சினையையும் தீர்த்து வைக்கும் வேலை, பெருந்தலைவர் காமராசர் தலையிலேதான் நேருவின் புதல்வி இந்திரா காந்தியைக் பிரதமராக்கினார்.