________________
17 ஆளும் கட்சியாக தி. மு. க. விளைவாக அதன் 1967 - ஆம் ஆண்டு பொதுத் தேர் தலில் அண்ணா, இராஜாஜி, பி. ராமமூர்த்தி காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், சிலம்புச் செல்வர் ம.பொ. சி, மூக்கையா தேவர் ஆகியோர் ஒன்றுபட்டனர். தேர்தலில் தி.மு.க. 138 இடங்களைப் பெற்றுத் தமிழக முதல்வராக அண்ணா பொறுப்பேற்றார். இருபது ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் முடிவு 1967-ல் ஏற்பட்டது. 'சென்னைராஜ்யம்' என்றிருந்த நமது மாநிலத்தின் பெயரை 'தமிழ்நாடு' என மாற்றிய பெருமை அண்ணா வின் ஆட்சிக்குரியது. பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகள் தான்-இந்திக்கு இடமில்லை. மும்மொழித் திட்டத்தை மாற்றி இருமொழித் திட்டமாக அறிவித்த சிறப்பும் தமிழ்நாட்டில் தி. மு. க. ஆட்சிக்கு உண்டு. இருமொழிக் கொள்கையில் அண்ணா மிக்க உறுதியாக இருந்தார். அண்ணா பொறுப்பேற்ற சில மாதங்கள் கழித்து இந்தியை எதிர்த்து மாணவர்கள் மீண்டும் ஒரு பெருங்கிளர்ச்சி தொடங்கினர். இரயில்கள், பேருந்துகள் எரிந்து சாம்ப லாயின. அதனையொட்டித்தான் தமிழகத்தில் இரு மொழி திட்டத்தைக் கழக அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இவ்வாறு 1938 முதல் 1968 வரையில் முப்பது ஆண்டுக் காலம் தமிழ்நாடு, இந்தியை எதிர்த்துக் கொடி தூக்கியிருக்கிறது. இன்னமும் இந்தி எதிர்ப்பு, நீறுபூத்த நெருப்பாகத்தான் தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழர் இல்லத்து நிகழ்ச்சிகள், தமிழ்ப்பண்பாட்டுக்கு முரணான வகையில் நடைபெற்றதையும் மாற்றி அமைத்த