உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 களைத் தேசிய மயமாக்குதல், மகாராஜாக்களுக்கு அளித்து வந்த மானியங்களை நிறுத்துதல்-போன்ற சம தர்மத் திட்டங்களுக்குக் கழகத்தின் உடன்பாடு என்றும் உண்டு என்பதை நிலைநிறுத்தும் வண்ணம் இந்திராவின் கரத்தை வலுபடுத்த முனைந்தோம். எனவே வி.வி. கிரி வெற்றிபெற முடிந்தது. தேர் தல் முடிவு வேறுவிதமாக இருந்து, சஞ்சீவ ரெட்டி வென்றிருந்தால் 1969லேயே இந்திரா வீட்டுக்குச் சென் றிருப்பார். இந்திராவைப் பிரதமராக்கியதன் மூலம் காமராஜர் ஒரு தவறு செய்தார். இந்திராவைப் பிரதமர் பதவியில் நீடிக்க வைத்ததன் மூலம் நமது கழகம் ஒரு தவறைச் செய்தது. 1969இல் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் 24 வாக்குகளும், சட்டப் பேரவையில் 138 வாக்குகளும் கிடைக்காவிட்டால் கிரி, தோல்வி அடைந்திருப்பார். இந்திராவின் ஆட்சி அப்போதே முடிந்து போயிருக்கும். இந்திராவின் பதவி வலுப் பெற்ற பிறகு, 1971-ல் பொதுத் தேர்தலை அறிவித்தார். கழக அரசின் பதவிக் காலம் 1972 வரையில் இருந்தாலும்கூட, தமிழ் நாட்டிலும் சட்டசபையைக் கலைத்து விட்டுத் தேர்தலில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டது. இந்தியா முழுதும் நாடாளுமன்றத் தேர்தல் நடை பெற்ற 1971ல், ஓராண்டு முன் கூட்டியே சட்டமன்றத் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைத்து வைத்துக் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்! தி. மு. க. வின் துணிவுக்குப் பாராட்டு தி.மு.க.வின் பாராட்டாதவர் இல்லை! துணிவையும், நம்பிக்கையையும்