உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

21 தேர்தலில், 138 ஆக இருந்த சட்ட மன்ற உறுப்பினர் கள் எண்ணிக்கை கழகத்திற்கு 184 ஆக உயர்ந்தது. இந்தியாவில் ஒரு மாநிலத்தில் எதிர்க்கட்சி ஆட்சி நான்காண்டுகள் தொடர்ந்து நடைபெற்று, அடுத்த தேர் தலில் முன்னைவிட அதிக பலத்துடன் ஆட்சியில் அமர்ந்து, மேலும் ஐந்தாண்டுக் காலம் மொத்தம் ஒன்பது ஆண்டு களுக்கு மேலாக நிலையான அரசைக் கொடுத்தது, கழக ஆட்சி நடைபெற்ற தமிழ் நாட்டிலே மட்டுந்தான். கேரளத்தில் கூட்டணி ஆட்சி! ஒரிசாவில் சுதந்திரக் கட்சி ஆட்சி! பஞ்சாபில் அகாலிதளத்து ஆட்சி! மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணி ஆட்சி! இவற்றில் எதுவுமே முழுவலிவுடன் நிலைபெற்று நிற்கவில்லை. கேரளத்தில் மட்டுமே அதுவும் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி மட்டுமே தொடர்ந்து நடை பெற்றது. கழக ஆட்சியின் தமிழ்த் தொண்டு மொழி, கலை, பண்பாடு, வரலாறு இவற்றை வளர்க் கவும், பாதுகாக்கவும் தமிழ்நாட்டில் தி. மு. க. அரசு புதிய பூம்புகாரை உருவாக்கியது. பாஞ்சாலங்குறிச்சியில் வெள்ளையரை எதிர்த்து வீரப் போர் நடத்தி மாண்டு விட்ட வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு நினைவுக் கோட்டை எழுப்பியது. உலகத் திருமறை எனப்போற்றப் படும் திருக்குறள் தந்த வள்ளுவனுக்கு வள்ளுவர் கோட்டம் அமைத்தது. தேவநேயப் பாவாணரைக் கொண்டு ‘அகர முதலி’ தயாரிக்கத் தொடங்கியது. டாக்டர் மு. வரதராசனார் தலைமையில் தமிழக வரலாறு எழுத ஒரு குழுவை உருவாக்கியது, அந்தக்குழு வெளியிட்ட தமிழக வரலாற்றின் முதல் தொகுப்பான "தொல் பழங்காலத்