உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

53 உங்கள் மகன் ‘ஸ்டாலினை' மிஸாவில் கைது செய்ய வந்துள்ளோம்' என்றனர். ‘அவன் வெளியூர் நிகழ்ச்சிக்குப் போயிருக்கிறான். நாளைக்குத்தான் வருவான்!' என்றேன். போலீசார் வீடு முழுவதையும் சோதனையிட்டனர். ‘நான்கூறுவதை நம்புங்கள். நாளைக்கு அவன் வந்ததும் நானே உங்களுக்குத் தகவல் கொடுக்கிறேன்.' -என்று உறுதி அளித்தேன். அவ்வாறே ஸ்டாலின் மறுநாள் வந்ததும்-போலீ சாருக்குத் தகவல் கொடுத்து அவர்கள் வந்ததும் அவர் களிடம் ஒப்படைத்தேன். மறுநாள் முரசொலி மாறனைத் தேடிக்கொண்டு வந்தார்கள். அவர் டெல்லியிலிருந்து வந்து கொண்டிருக்கிறார், வந்ததும் தகவல் கொடுப்ப தாகச் சொன்னேன். அவ்வாறே அடுத்த நாள் போலீ சாருக்கு செய்தி அனுப்பி, அவர்கள் உடனடியாக மாறனை யும் கைது செய்து அழைத்துப் போனார்கள். மிசாவில் கைதான கழகத் தோழர்கள் இதற்கிடையே தலைமைக் கழகத்தில் செயலாளர்க ளானசிட்டிபாபு, வீராசாமி, நீலநாரயணன் செ.கந்தப்பன் ஆகியோர் மிசாக்கைதிகளாகத் தமிழகமெங்கணும் சிறைகளில் அடைக்கப்பட்டனர். மிசாவின் கீழ் கைதானோர் முழுப்பட்டியல் வருமாறு: சென்னை மாவட்டம் நீல நாராயணன், நா. வீராசாமி, ஏ. வி. பி. ஆசைத் தம்பி, முரசொலி மாறன், மு. க. ஸ்டாலின், டி.கே