உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

61 இன்றைய மத்திய அரசின் சட்ட அமைச்சராக இருக்கிற திரு. சாந்திபூஷண் தான் சர்க்காரியா கமிஷன் முன்னால், "இந்த விசாரணை அரசியல் வஞ்சகம் தீர்க்கச் செய்யப்பட்ட ஏற்பாடு” என்று தி. மு. க. சார்பில் எடுத்துச் சொல்லி வெளியேறினார். தணிக்கை அதிகாரிகளின் தர்பார் சர்க்காரியா விசாரணையில் ஏன் கலந்து கொள்ள வில்லை என்ற காரணங்களைக் கூட ஏடுகளில் வெளியிடக் கூடாதென்று 'சென்சார்' அதிகாரிகள் தடுத்து விட்டார் கள். சர்க்காரியா கமிஷனுக்கு தி. மு. க. முன்னாள் அமைச் சர்கள் அளித்த பதில் வாக்குமூலங்களைப் பத்திரிகைகளில் வெளியிடக்கூடாது என்று தணிக்கை அதிகாரிகள் தடுத்து விட்டனர். அதே நேரத்தில் தி. மு. க. முன்னாள் அமைச் சர்களுக்கு எதிராக சர்க்காரியா கமிஷனுக்குத் தரப்பட்ட வாக்கு மூலங்கள் ஏடுகளில் பக்கம் பக்கமாக வெளியிடு மாறு மத்திய செய்தித்துறை அமைச்சர் சுக்லா அவர் களால் வற்புறுத்தப்பட்டு அவ்வாறே வெளியாயின. வானொலி, டெலிவிஷன் இரண்டும் தி. மு. க.வை மாசு படுத்துவதையே தங்கள் நிலைய நிகழ்ச்சிகளாக ஆக்கிக் கொண்டன. ஏற்கனவே சென்னை திருச்சியிலுள்ள வானொலி நிலையங்கள் தி. மு. க. என்றால் தீ மிதித்தது போல் குதிக்கும் சில மனிதர்களின் ஆதிக்கத்தில் இருந்த காரணத்தால் சுக்லாவின் ஆணை அவர் சொன்னதற்கு மேலாகவே அமோகமாக நிறைவேற்றப்பட்டது இத்தகைய நோக்கும் போக்கும் கொண்ட வானொலி டெலிவிஷன், பத்திரிகை நிறுவனங்கள் இந்திராவை ‘பராசக்தி' என்று போற்றவும், தி. மு. கவை "பாபிகள் கூடாரம்' என்று தூற்றவும் மிக நன்றாகப் பயன்படுத்தப் பட்டன.