உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

72 வில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு எனக்கு உதவி யாக இருந்த சென்னை டி. ஆர். பாலு மிசாக் கைதி யானார். தலைமைக் கழகச் செயலாளர் பலரும் மிசாக் கைதி களாக இருந்ததால், மாணவர் அணிச் செயலாளர் எல். கணேசன் அவர்களை, தலைமைக் கழகப் பொறுப் பாளராக நியமித்திருந்தோம். அவரும் ஓரிரு மாதத்தில் மிசாவில் பிடிக்கப்பட்டார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் சாதிக்பாட்சா. தலைமைக் கழகப் பொறுப்பாளராக ஆக்கப் பட்டார். தலைமைக் கழகத்தில் சோதனை தலைமைக் கழகம் சோதனை யிடப்பட்டது. கணக்கு கள், மினிட் புத்தகங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இதுவரையில் திரும்பக் கொடுக்கவில்லை. தன் காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட கணவன் திரும்பி வரவே இல்லை என்ற செய்தியை தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி இப் போதுதான் புகாராகக் கொடுக்க முடிந்தது. நெருக்கடி நேரத்தில் அந்த செய்தியைக்கூட அந்தப் பெண்மணியால் வெளியில் கூற முடியவில்லை. சீராளன், திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்ட கொடுமையும் நெருக்கடி நேரத் தில்தான் நடைபெற்றது. வட ஆற்காடு மாவட்டத்தில் அதுவும் அந்த நேரத்தில் மூடி மறைக்கப்பட்ட செய்தி யாகவே ஆகிவிட்டது. சிறையிலிருந்த தி.மு.க. தோழர்களின் தாயோ, தந்தையோ, மகனோ, மகளோ, மனைவியோ இறந்து விட்டால் சிறையிலிருப்பவர்க்கு ஒரு நாள் அல்லது இரு நாட்கள் பரோல் கிடைத்திடவே அரும்பாடு பட வேண்டியிருந்தது. ஆனால் தி. மு.க.வுக்கு