உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தி.மு.க. எந்த நிலையிலும் கொள்கையை முன்வைத்து இயங்குகிற ஒரு கட்சி என்பதைத் தொடர்ந்து உறுதிப் படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. சார்பிலும், தி. க. சார்பிலும் இந்திரா காந்திக்கு எதிராகக் காட்டப்பட்ட கறுப்புக் கொடி நிகழ்ச்சி, வரலாற்றில் இடம் பெற்று விட்ட ஒன்றாகும். இதே தமிழ்நாட்டில்தான் இந்திராகாந்தி இந்தியா வின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மகத்தான முறையில் பலதடவை வரவேற்கப்பட்டிருக்கிறார். அவரைப் பிரதமராக ஆக்கியதும் தமிழ் நாட்டின் பெருந் தலைவர் காமராசர்தான்! அந்தப் பதவியில் அவர் நீடிக்க அவருக் குத்துணை நின்றதும் தமிழ்நாட்டுப் பேரியக்கமாம் தி.மு.கழகம் தான்! இன்று எங்குமே சந்தித்திராத எதிர்ப்பை இந்தியா வின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சந்தித்ததும் தமிழ் நாட்டில் தான்! தமிழ்நாடு தொடங்கிய எதிர்ப்பு கர்நாடகத்தில் பரவியது. ‘ஆந்திரத்துக்கு இப்போது வரவேண்டாம்' என்றே கூறி அந்த அம்மையாரை வழி அனுப்பிவைத்து விட்டார்கள். கறுப்புக்கொடி நிகழ்ச்சி கழக அரசைக் கலைத்தமைக்காகக் காட்டப்பட்ட கறுப்புக்கொடி அல்ல! கறுப்புக் கொடி காட்டியதற்கான காரணங்களில் அதுவும் ஒன்று! ஜனநாயக நெறியை வேரோடு சாய்த்து சர்வாதிகார முறையை நடைமுறைப் படுத்த, தன்னுடைய சொந்த நலத்திற்காகச் சட்டங்களை மந்தி கை மாலையாக்க,