________________
இந்திரா காந்தி, லட்சக்கணக்கான குடும்பங்களைச் சீரழிக்க முற்பட்டார்! மனித உரிமைகள் அனைத்துக்கும் சவப்பெட்டி தயாரித்தார். முடியிழந்த பிறகும் கூட தான் முன்பு எடுத்த முடிவுகளே சிறந்தவை என்று பிடிவாதம் பிடிக்கிறார். வேதனையில் கருகிய மக்களின் சார்பாக, சிங்கம் நிகர் சிட்டிபாபுவும், சாத்தூர் பாலகிருஷ்ணனும் சிறையில் மாண்டு மடிய நேரிட்ட கொடுமைகளுக்கு ஆளான குடும் பங்களின் சார்பாக, சிறைப்பட்ட செம்மல்கள் சிந்திய செந்நீர் கண்டு கண்ணீர் மல்கிய அவர்தம் உற்றார் உறவினர் பெற்றோர் சார்பாக, தனக்கொரு சட்டம் பிறர்க் கொரு சட்டம் ”என வகுத்துக்கொண்டு சட்டத்தின் கெளரவத்தையே குலைத்து, நீதிமன்றங்களைத் தன் காலடி யில் போட்டு மிதித்ததைக் கண்டு கலங்கிய நடுநிலை யாளர்கள் சார்பாக, இந்தியாவில் நடைபெற்ற இரண் டாவது சுதந்திரப் போரில், நெருக்கடியை எதிர்த்து அமைப்பு ரீதியாக முதல்குரல் கொடுத்த தமிழகத்து அரசியல் இயக்கமும், இன எழுச்சி இயக்கமுமான திரா விட முன்னேற்றக் கழகம் வேதனைகளுக்கெல்லாம் வித்திட்ட இந்திராகாந்திக்குப் பேரெதிர்ப்பைத் தெரிவிப் பதிலும் முன்னணியில் நின்றது- முதல் முழக்கம் செய்தது-என்பதற்கு எடுத்துக் காட்டான நிகழ்ச்சியே; 1977 அக்டோபர் 29, 30 தேதிகளில் காட்டப்பட்ட கறுப் புக் கொடி அன்று கறுப்புக்கொடி காட்டாததேன்? கழக ஆட்சியைக் கலைத்தமைக்காக அல்ல! சர்வாதி தனது துரைத்தனமாக காரித் தனத்தையே ஆக்கிக்