________________
79 கொண்டதைக் கண்டித்து! அதுவே சரி என்று இன்னமும் உறுதிபடுத்துவதை எதிர்த்து! 1976-ல் இந்திரா காந்தி வந்தபோது ஏன் கறுப்புக் கொடி காட்டவில்லை?-இப்படிச் சிலர் பேசினர்! அந்தச் சிலர் இருப்பது தமிழ்நாட்டுக்குத் தொன்று தொட்டு இருந்து வரும் “சாபக் கேடு”-அந்தச் சிலர் எப்போதும் இருப்பர் கழனியில் களைபோல! முழுமதி முகத்தில் குறு மருக்கள் போல! 1976-ல் கறுப்புக் கொடி காட்டப்படும் என்று எப்படி விளம்பரம் செய்ய முடியும்? யுமா? ஏடுகளில் வெளியிட முடியுமா? அச்சகங்கள் சுவரொட்டிகளை அச்சடித்துத் தரமுடி கறுப்புக் கொடியைக் கையிலேந்தி நின்றாலும் அது செய்தியாக வர முடியுமா? சென்சாரை எதிர்த்து நான் செய்த மறியல் அறப் போரே நெருக்கடி காலம் முடிந்த பிறகுதானே நாட் டுக்குத் தெரிந்தது? ஜனநாயக முறைப்படி இந்திராவுக்கு எதிராக அறவழியில் நடத்தப்பட்ட கறுப்புக் கொடி நிகழ்ச்சியில் புகுந்து கலகம் விளைத்து வன்முறையைத் தூண்டினர் மதுரைக் காங்கிரசார்! தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கை அதன் காரணமாக விரும்பத் தகாத பல நிகழ்ச்சிகள் மதுரையில் நடைபெற்றன. மதுரையில் வன்முறை உருவாகக் காரணமென்ன என் பதை ஆராய்ந்து அதனைச் சரி செய்வதற்குப் பதிலாக,