பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அநேகமாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய எல்லா விஷயங்களையுமே அவர் சுருக்கமாகச் சொல்லி விட்டார். ‘தலை நிமிர்ந்து நில்லுங்கள்! ஜெய்ஹிந்த்!’ என்பவை அவர் பேச்சின் இறுதிச் சொற்களாக ஒலித்தன.

தவாங்

மறுநாள் பீகிங்கிலிருந்து சீனப் படைகளுக்கு உத்தரவு ஒன்று வந்தது. மக்மகான் கோட்டின் எல்லையை அவைகள் மதிக்க வேண்டாம் என்பதுதான் அது. ஏற்கெனவே அவைகள் அந்த எல்லையைத் தாண்டிப் பல இடங்களில் போரிட்டுக் கொண்டிருந்தன. டோலா, கின்ஸிமானே பகுதியிலிருந்து தவாங் நகரை நோக்கி இருமுனைத் தாக்குதலுக்கு அவை ஏற்பாடு செய்துகொண்டிருந்தன. தவாங் கடல் மட்டத்திற்கு மேல் 10,000 அடி உயரமுள்ளது. மக்மகான் எல்லைக் கோட்டிலிருந்து அது 16 மைல் தொலைவிலுள்ளது. லடாக்கிலும் இந்தியப் படைகள். மீண்டும் அணிவகுத்துக்கொண்டு தற்காப்புக்குத் தயாராயிருந்தன.

கியூபா நெருக்கடி

இந்தியாவின் சுதந்தரத்திற்காகவும், மானத்திற்காகவும், வெண்பனிப் பாறைகளிலும் மலைச்சாரல்களிலும் நின்று இந்திய வீரர்கள் போராடி உதிரம் சிந்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், உலகின் கவனம் அனைத்தும் கியூபா சம்பந்தமாகத் திரும்பிவிட்டது. ரஷ்யாவுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் எந்தக் கணத்திலும் அணுகுண்டுப் போர் தொடங்கிவிடும் என்ற நிலைமை ஏற்பட்டது. கியூபாவில் அபாயகர மான, பெருந்தாக்குதல்களுக்குத் தேவையான

91