பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 கிலோமீட்டர் [1] தூரம் பின்னே சென்று போர் நிறுத்தம் செய்யவேண்டும்.

2. இதற்கு இந்தியா இசைந்தால், சீன கிழக்குப் பகுதியிலுள்ள தன் எல்லைக் காவற்படையினரை ஆதிக்கிய எல்லைக் கோட்டிற்கு வடக்கே திருப்பி அழைத்துக் கொள்ளும். நடுப்பகுதியிலும் நெடுங்காலமாக வழக்கத்தில் இருந்துவரும் எல்லைக் கோட்டைத் தாண்டுவதில்லை என்று இரு பக்கத்தாரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

3. பீகிங்கிலோ, புது டில்லியிலோ இரு நாட்டுப் பிரதம மந்திரிகளும் சந்தித்துப் பேசவேண்டும்.

சீனாவின் சமாதான வேட்டாக விளங்கிய மேற்கண்ட 3 நிபந்தனைகளுள்ள கோரிக்கையை இந்திய சர்க்கார் நிராகரித்து, அதற்குப் பதிலாக வேறு யோசனை அடங்கிய அறிக்கையை வெளியிட்டது. இராணுவ பலத்தின் மிரட்டலின் நடுவே இந்தியா சமாதானத்திற்குத் தயாராயில்லை; சீனர் 40 முதல் 60 கிலோ மீட்டர்வரை இந்தியப் பிரதேசங்களுக்குள் வந்து இருந்துகொண்டு, இரு திறத்தாரும் 20 கிலோ மீட்டர் துாரம் பின் செல்லவேண்டும் என்பது ஏமாற்று வித்தை; 1962, செப்டம்பர் மாதம் 8- ந் தேதி சீனப் படையினர் மக்மகான் கோட்டைத் தாண்டிவரத் தொடங்கியதால், அந்தத் தேதிக்கு முன்பிருந்த எல்லைக்காவது சீனர்கள் திரும்பினால் தான், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும். இந்த விஷயங்களை நம் அரசாங்க அறிக்கை ஐயம் திரிபுக்கு இடமில்லாமல் தெளிவாக அறிவுறுத்தியது.


  1. ஒரு கிலோமீட்டர் = 3,280.89 அடி (சுமார் 5 பர்லாங்)
93