பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். தவாங் முக்கியமான ஒரு பெளத்தத்தலம். அங்கே பெரிய பெளத்த மடாலயம் ஒன்றுண்டு. அதைச் சேர்ந்த பிக்குக்களும் வெளியேறிவிட்டனர். தவாங் பள்ளத்தாக்கில் சுமார் 6,000 அல்லது 7,000 மக்கள் பல இடங்களில் வசித்துவந்தனர்.

ஸியாங் டிவிஷனில் லாங்ஜூ நகருக்கு 50 மைல் தொலைவிலும் சீனர் தாக்கிவந்தனர்.

லடாக்கில் கல்வன் நதிப் பகுதியில் ஒரு காவல் நிலையத்தை நம் படைகள் இழந்தன. சுஷுல் பிரதேசத்தில் 4 காவல் நிலையங்களில் டாங்குகள், பீரங்கிகள், இயந்திரத் துப்பாக்கிகளால் சீனர் தாக்கியதில் அவை வீழ்ந்துவிட்டன. கடைசி நிலையமான ஐந்தாவது நிலையத்தையும் அவர்கள் தாக்கிவந்தனர். ஆனால் அத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

உலக நெருக்கடி தளர்ந்தது

25-ந் தேதி கியூபா நெருக்கடி தளர்ந்தது. ஸோவியத் கப்பல்கள் அமெரிக்க முற்றுகையை ஊடுருவிச் செல்லவில்லை. ஆயுதங்களுடன் சென்ற 12 கப்பல்கள் திரும்பிச் சென்றுவிட்டன. பெட்ரோல் கொண்டு வந்த ஒரு கப்பல் மட்டும் கியூபாவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் காரியதரிசி ஊதாண்ட், இரண்டு மூன்று வாரங்களுக்கு நெருக்கடி நேராமல், அமெரிக்க ஐக்கிய நாடும், ரஷ்யாவும் நடந்துகொள்ள வேண்டுமென்று ஜனதிபதி கென்னடிக்கும், ஸோவியத் பிரதமர் குருஷ்சேவுக்கும் வேண்டுகோள் அனுப்பியிருந்ததற்கு இசைவாக அவ்விரு பெருந்தலைவர்களும் நடந்துகொண்டனர். இவ்வாறு உலகமே நாசமுறக் கூடிய அணு ஆயுதப் போர் தவிர்க்கப் பட்டதால்தான், இந்தியா விஷயமாக அமெரிக்காவும்,

95