பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பிரிட்டனும், பிற நாடுகளும் நிதானமாக ஆலோசனை செய்ய வாய்ப்பு ஏற்பட்டது.

அவசரப் பாதுகாப்புச் சட்டம்

26-ந்தேதி இந்திய ராஷ்டிரபதி தேசத்தில் அவசர நிலையைப் பிரகடனம் செய்தார். அன்றிரவு முதலே தேசப் பாதுகாப்பு அவசரச் சட்டம் நாடெங்கும் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. அச்சட்டத்தின் பிரிவுகள் பலவும் இரண்டாவது உலகப் போரின்போது உபயோகித்த சட்டத்திலுள்ளவைகளே. இராணுவம், தற்காப்பு, பொதுமக்களிடையில் அமைதி, அவசியப் பண்டங்களின் விநியோகம், அவசியமான சமூக சேவைக்குரிய வேலைகளுக்கு ஊறு நேராமல் பராமரித்தல் ஆகியவற்றைக் கருதி அரசாங்கத்திற்கு இதனால் விசேட அதிகாரங்கள் வழங்கப் பெற்றன. சீன ஆக்கிரமிப்பாளருக்கு உதவியாக ஐந்தாம் படை வேலையில் ஈடுபட்டவர்களுக்கு இதன்படி மரண தண்டனை விதிக்கலாம். இந்தச் சட்டத்தின் முன்பு நாட்டிலுள்ள மற்றைச் சட்டங்கள் செல்லமாட்டா. போர் முயற்சிகள் இடையூறின்றி நடந்து வருவதற்கு இது இன்றியமையாததாகும்.

லடாக்கில் சாங்லா கணவாயிலிருந்த இந்தியக் காவல் நிலையம் தவிர, மற்ற நிலையங்களி லெல்லாம் சீனரை எதிர்த்துக் கடும்போர் நடந்து வந்தது. நம் காஷ்மீர் துருப்புக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டன. சீனர்கள் புதிய பட்டாளங்களுடன் வந்து லடாக்கின் தென் பகுதியில் தீவிரமாகக் தாக்கியதில், டெம்சோக், ஜாராலா என்ற நிலையங்களிலிருந்து இந்தியப் படைகள் வெளியேற நேர்ந்தது. டெம்சோக் சுஷு-லிலிருந்து 100 மைல் தென் கிழக்கிலும், அதிலிருந்து ஜாரா லா 8 மைல் வடகிழக்

96