பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கிலும் உள்ளவை. டெம்சோக் காவற்சாவடியில் 31 படை வீரர்கள் இருந்துகொண்டு, 150 எதிரிகளுடன் போராடி, சுமார் 100 பேர்களை வதைத்தனர். பகைவரின் டாங்குகள் சுட ஆரம்பித்த பிறகே, சாவடி கைவிடப்பட்டது. சென்ற ஒன்பது, பத்து நாட்களில் நடந்த போராட்டங்களில் சுமார் 2,000 அல்லது 2,500 இந்திய வீரர்கள் உயிரிழந்திருக்கலாம், அல்லது காணப்பெறாமல் தவறியிருக்கலாம் என்று செய்தி வந்தது. சீனப் படையினர் நம் படைகளைப் பார்க்கிலும் 10 அல்லது 5 மடங்கு கூடுதலாக இருந்து தாக்கிய தாகவும் அறிவிக்கப்பட்டது. ஆயினும் ஒரு வாரக் காலத்தில் அவர்கள் அதிகமாக முன்னேறி வராமல் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஒரே சமயத்தில் லடாக்கிலும், நேபாவிலும் பல முனைகளில் சீனர் தாக்கியதன் நோக்கம் இந்தியப் படைகளைப் பல இடங்களிலே சிதறி நிற்கும்படி செய்வதற்காக இருக்கலாம். ஐந்தாம் நாள் போரிலேயே நேபாவில் 4 முனைகளில் சண்டை நடந்து கொண்டிருக்கையில், லாங் ஜூவுக்கும் அஸ்ஃபிலாவுக்கும் நடுவே புதிதாக ஒர் அரங்கில் அவர்கள் பிரவேசித்துக்கொண்டிருந்தனர். லடாக்கிலும் வடக்கில் சிப்சாப்புக்கும் தெற்கில் டெம்சோக்குக்கும் இடையே சாங்சென்மோ என்ற நிலையத்தைத் தாக்கிப் பிடித்துக்கொண்டனர். லடாக்கில் சுஷு-ல் நகரில் நம் விமான தளம் இருந்ததால், அதன் மூலம் படைகளுக்கு ஆயுதங்களும், உணவு முதலியவைகளும் வந்து சேர்வதைத் தடுக்க வேண்டும் என்பது அவர்கள்நோக்கமாயிருந்திருக்கும். எந்த இடத்திலும், இந்திய வீரருடைய கடுமையான எதிர்ப்பினால், சீனர் பலர் உயிரிழக்காமல் முன்னேற முடிந்ததில்லை. ஆயினும் ஆட்களின் எண்ணிக்கையிலும் நவீன ஆயுதங்களிலும் அவர்களே மேலோங்கி

இ. சீ. பா.-7

97