பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


றிருந்ததாகத் தெரிகிறது. நமது இராணுவத்தின் முக்கியமான சில பகுதிகளும், எஞ்சியுள்ள படைகளும் காஷ்மீரிலே இருந்தன. இக்காலத்தில் உபயோகிக்கப்படும் நவீன ஆயுதங்கள் பலவற்றை முன்னதாகவே வெளிநாடுகளிலிருந்து வாங்கி ஆயத்தமாக வைத் திருந்தால், நம் படைகளுக்கு மிகவும் உபயோகமாக இருந்திருக்கும். உள்நாட்டிலுள்ள அரசாங்க ஆயுத உற்பத்திச்சாலைகளிலும் அவைகள் உற்பத்தியாகவில்லை. மொத்தத்தில் இரண்டாவது உலகப்போரில் உபயோகித்தவைகளைப் போன்ற ஆயுதங்களே நம் படைகளிடம் அதிகம் இருந்தன.

நேபா முதலிய நம் எல்லைப்புறங்களே நம் படை வீரர்களுக்குப் புதுமையானவை. ஆங்கிலேயர் காலத்தில் அங்கெல்லாம் துருப்புக்களை அனுப்பியதேயில்லை. சீன திபேத்தைப் பிடித்த பிறகுதான் நாம் அங்கெல்லாம் காவற்சாவடிகள் அமைக்க நேர்ந்தது. நாட்டில் மழைக்காலம், இமாலயப் பிரதேசத்தில் பனிக்காலம். எதிரிகள் பணியில் பழகியவர்கள். நம் படையினரில் பலர் வெப்பம் மிகுந்த பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள். திடீரென்று பனிமழை பொழியும் மலைகளிலும், சாரல்களிலும், பாலைகளிலும் அவர்கள் புகுந்து போரிடவேண்டியிருந்தது. பனிக்கு ஏற்ற உடைகளும், பூட்ஸுகளும் குறைவாக இருந்தன. மேலும் நம் வீரர் களுக்கு எந்தப் பொருள்களை அனுப்புவதாயிருந்தாலும், விமானங்களின் மூலம் மலைச்சாரல்களில் எறிய வேண்டியிருந்தது. சரியான சாலைகளில்லை. போக்குவரத்துக்குரிய சாதனங்களுமில்லை. ஆயினும் நம் படை வீரர்கள் கொடிய சீனர்களின் கொட்டத்தை உடனே ஒடுக்க முடியாதுபோயினும், அவர்களைப் பழிவாங்குவதில் குறை வைக்கவில்லை.

99