பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



யும் ஏற்படச் செய்தார்கள். இப்போது உங்கள் நாட்டிலேயே ஆக்கிரமிக்கிறார்கள். இவற்றை யெல்லாம் செய்துள்ளவர்களைச் சுதந்தரமான உலக மக்கள் எழுந்து நின்று எதிர்த்தாலன்றி, இன்னும் அதிகம் செய்யவும் கருதியிருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.’


இந்தியத் தலைவர்களின் முழக்கங்கள்

திடுக்கிடத்தக்க முறையில் சீன திடீரென்று படை யெடுத்ததில் இந்தியத் தலைவர்கள் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த அதிர்ச்சி தெளிந்த பின்பு, பலர் பல இடங்களில் மக்களிடையிலும், ராஜ்ய சட்டசபைகளிலும், பிற இடங்களிலும் வீர முழக்கம் செய்துள்ளார்கள். சிலர் குமுறுகின்ற எரிமலைகள் அனல் கக்குவது போல் ஈனச் சீனரை எதிர்த்துப் பேசினர்கள். இந்தியப் பிரதம மந்திரி என்றுமே பேச்சில் வல்லவர். முக்கியமான நிலைமைகளி லெல்லாம் சினரின் ஆக்கிர மிப்பு நாடு பிடிக்கும் ஆசையே என்பதையும், போர் நீண்டகாலம் நடக்கும் என்பதையும் அவர் வற்புறுத்தி வந்தார். நமது மதிப்புக்குரிய புதிய ராஷ்டிரபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களும் சீனர் பிடித்துக் கொண்ட பகுதிகளைத் திரும்பக் கைப்பற்றுவதே நம் கடமை என்பதை வலியுறுத்தி வந்தார். ‘இந்திய மண்னில் சீனர்கள் நடத்தியுள்ள ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தும் போருக்கு ஒரே ஒரு முடிவுதான் இருக்க முடியும். அதுவே நமக்கும் நம் துருப்புக்களுக்கும் வெற்றி ஏற்படுதல்!’ என்பது அவர் வாக்கு. இந்தச் சந்தர்ப்பத்தில், நமது முன்னாள் ராஷ்டிரபதியான பாபு ராஜேந்திர பிரசாத், நோய் வாய்ப்பட்டிருந்த போதிலும், பாட்னா நகரில் இரண்டு லட்சம் மக்கள் நிறைந்த கூட்டத்திலே கூறிய சில வாசகங்களை இங்கே குறிப்பிடுதல் நலமாகும். அவருடைய சொற்பொழிவில்

101