பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 குறித்த கீழ்க்கண்ட விஷயங்களைப் பற்றி ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்:

‘சுதந்தரத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஒவ்வோர் ஆணும், பெண்ணும், குழந்தையும்கூட உதவி செய்ய முடியும்.

‘சீனா தன்னுடைய (நாடு பிடிக்கும்) விஸ்தரிப்புக் .காெள்கை காரணமாகத் திபேத்தைப் பிடித்துக் கொண்டு, அந்த நாட்டின் சமயத்தையும், கலாசாரத்தையும் அழித்துவிட்டது.

‘திபேத்தை இந்தியா விடுவித்து, அதை மீண்டும் திபேத்தியர்களிடம் அளித்தாலும், அதில் அறத்திற்கு மாறான தவறு எதுவுமில்லை.

‘சீனர்கள் திருடர்களைப் போல் சந்தடி செய்யாமல் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டார்கள். படையெடுத்த சீனர்களிலே சிலர் எப்படியேனும் நாட்டினுள் பிரவேசித்தால்கூட அவர்களுக்கு ஒரு வாய்ச் சோறாே, ஒரு கரண்டி நீரோ கிடைக்காமற் செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

‘நம்முடைய மண்ணில் படையெடுத்து வந்துள்ளவர்களில் எவர்களாவது மடிந்து விழுந்தால், அவர்களை நாம் புதைக்கவும் கூடாது.

‘மக்களின் கரை கடந்த சுதந்தர ஆர்வமும் உற்சாகமும் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. ஆனால் இந்த உற்சாகத்தைப் பயனுள்ள வகையில் உபயோகித்துக்கொள்ள வேண்டும்.

‘நாம் வெற்றி பெறுவோம் என்பது உறுதி. உலகத்திலுள்ள எந்தச் சக்தியும் நம்மை அடிபணிய வைக்க முடியாது !’

இம்மாதிரியாகச் சாந்தி நிறைந்த ராஜன் பாபு பேசுவது வழக்கமில்லை. இந்தச் சொற்கள், கர்மவிர

102