பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 தாமே மேற்கொண்டார். வெளிநாடுகளின் உதவிகளும் விரைவில் கிடைக்கும் என்ற அறிகுறிகள் தென்பட்டன. அமெரிக்கா, கானடா, பிரிட்டன் மூன்றும் நெருக்கடியான நிலையில் இந்தியாவுக்கு என்ன உதவிகள் செய்யலாம் என்று கலந்து ஆலோசிக்கத் தொடங்கின. பிரிட்டிஷ் அரசாங்கம் ஜெட் விமானங்களையும் போர் விமானங்களையும் அனுப்பத் தயாராயிருப்பதாகச் செய்தி வந்தது.

அமெரிக்கா, பிரிட்டிஷ் உதவிகள்

புது டில்லியில் அமெரிக்க ஸ்தானிகராக இருந்த திரு. கென்னத் கால்பிரெய்த் மிகுந்த நேசப்பான்மையுடன் இந்தியாவின் துயரங்களைக் கவனித்து, அவ்வப்போது தமது அரசாங்கத்திற்குச் செய்திகள் அனுப்பி வந்தார். அமெரிக்கா பெரிய அளவில் போருக்கு உதவி செய்யத் தயாரென்று அவர் முன்பே வாக்களித்திருந்தார். ஆனால் அந்நாடு கியூபா விவகாரத்தில் சிக்கியிருந்ததால், அது முடிந்த பிறகே இந்த உதவியைப்பற்றி முடிவு செய்ய முடிந்தது. கியூபாவில் அமைதி ஏற்பட்டவுடன், 50 லட்சம் டாலர் மதிப்புள்ள தாமாக இயங்கும் துப்பாக்கிகளும், கனரகப் பீரங்கிகளும், நிலங்களில் பரப்பும் வெடிக் கண்ணிகளும் அமெரிக்காவிலிருந்து அந்நாட்டின் 60 பெரிய விமானங்களில் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன. இந்தியத் துருப்புக்களைப் போர்க்களங்களுக்கு ஏற்றிச் செல்வதற்கும், போர்த் தளவாடங்களேக் கொண்டு செல்வதற்கும் உதவியாக 12 ‘ஹெர்க்குலிஸ்’ விமானங்களும் வந்தன. இவைகளே ஒட்டுவதற்கும், பராமரித்துக் கொள்ளவும் அமெரிக்காவிலிருந்தே விமானிகளும் ஊழியர்களும் வந்திருந்தனர். ‘பிரென்’ துப்பாக்கிகள், ‘ஸ்டென்’ துப்பாக்கிகள் முதலிய 150 டன்

104