பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



டிருந்தன. ஆனால் சீனர்கள் தங்கள் நோக்கங்களே மிகுந்த வேகத்துடன் நிறைவேற்றிக்கொள்ளத் தீர்மானித்திருந்தனர். இமயமலைப் பகுதிகளில் உறைபனி தொடங்கும் காலம் நெருங்கி வந்தது. வெளி நாடுகளின் ஆயுத உதவிகள் மேலும் மேலும் வந்து குவிவதற்கு முன்னாலும், புதிதாக இந்தியத் துருப்புக்கள் வந்து பெருகுவதற்கு முன்னாலும், தங்கள் வெற்றிகளை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று சீனப்படைகள் திரள் திரளாகப் புகுந்து போரிட்டன. நேபாவில் இந்தியத் துருப்புக்கள் சீனரை மேலோங்கவிடாமல் தடுத்தன. காட்டுப் புறங்களில் சீனர் இருக்கும் இடங்களைத் தேடிச் சென்றும் நம் காவற்படைகள் விரட்டத் தொடங்கின. சீனர் முன்னிலும் அதிக மூர்க்கமாகப் போரிட்டதுடன், நம் படைகளைத் தந்திரமாகச் சுற்றி வளைத்துக்கொள்ளவும் முயற்சி செய்தனர். நேபாவின் கிழக்குப் பகுதியிலுள்ள வலாங் நகருக்கு அருகே மிகப் பெரிய சீனப்படைகள் திரண்டு வந்து தாக்கின. இரு பக்கத்திலும் உயிர்ச் சேதம் அதிகமாகிக்கொண்டிருந்தது. அங்கிருந்த விமான தளம் பீரங்கிக்குண்டுகளால் தகர்க்கப் பெற்றது. நவம்பர் மாதம் 17-ந் தேதி வலாங் வீழ்ச்சியுற்றது. 20,000 சீனர்கள் வலாங் போரில் ஈடுபட்டிருந்ததாகச் சொல்லப்பட்டது. நேபாவின் கிழக்குக்கோடியில் வலாங்கிலும், மேலைக் கோடியில் ஸாே —லாவிலும் புதிய முனைகளை அமைத்துக்கொண்டு நம் படைகள் அணிதிரண்டு நிற்க ஏற்பாடு செய்துவந்தன. அஸ்ஸாமிலுள்ள தேஜ்பூர் நகரிலிருந்து புதிய படைகளும், தளவாடங்களும் சென்றுகொண்டிருந்தன. இடையில் வலாங்கின் வீழ்ச்சி பெரிய நஷ்டமாயிற்று.

106