பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 களைச் சீன மறுத்துவிட்டதாகத் தெளிவாக எழுதியது. சுருங்கச் சொன்னல், சீனா ஆக்கிரமிப்புப் போரினல் தான் அடைந்துள்ள ஆதாயங்களைக் கைவிடாமல் சமரசம் பேசவேண்டும் என்றே நினைத்தது.

கொழும்பு மகாநாட்டு உறுப்பினர்கள் மேலும் மேலும் முயற்சிகள் செய்தும் அவை பயனற்றுப் போயின. திமிர் பிடித்த சீனா வளைந்து கொடுக்காமல் நிமிர்ந்தே நின்றுவிட்டது.

கொள்கை அளவில் கொழும்புப் பிரேரணைகளை ஏற்றுக்கொள்வதாகச் சீனப் பிரதமர் 8-3-63-ந் தேதி இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு மறு மொழியாக நேருஜி, கொள்கை அளவில் ஒப்புக் கொள்வது பிரேரணைகளை ஒப்புக்கொள்வதாக ஆகாதென்று தெரிவித்தார். சமாதான முறையில் தீர்வு காண்பதில் சீன அரசாங்கம் அந்தரங்க சுத்தியாக ஆர்வம் கொண்டிருந்தால், அது கொழும்பு மகா நாட்டுப் பிரேரணைகளை, இந்திய அரசாங்கம் செய்துள்ளபடி, அப்படியே நிபந்தனையில்லாமல் முழுதும் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதன் பிறகுதான் இரண்டாவது படியான பேச்சுவார்த்தைகளுக்கு நாம் செல்லமுடியும்’ என்று அவர் முடிவாகக் கூறிவிட்டார்.

கம்யூனிஸ்ட் சீனா தானகவே படையெடுத்து வந்தது, தானகவே போரை நிறுத்திக்கொண்டது; தானகவே மறுபடி எப்பொழுது வேண்டுமானலும் போர் தொடுக்கும் நிலையில் நின்று கொண்டிருக் கின்றது. சீனப் படையினரான வெறி நாய்கள் இன்னும் இந்திய எல்லைகளுக்குள்ளே இருந்துகொண்டிருக்கின்றன. இந்தியா காலம் கருதிக்கொண்டிருக்கின்றது. இதுதான் இப்பொழுதுள்ள நிலைமை.

இ. சீ. பா.—8

113