பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதுதான். அது ஆசியக் கண்டத்தின் தென்கிழக்கில் பஸிபிக் கடலின் மேலைக் கரையிலுள்ளது. கிழக்கிலும் தென்கிழக்கிலும் பெருங்கடல், மற்றைப் பக்கங்களிலெல்லாம் நிலப்பரப்பான நாடுகளே எல்லைகள். சீன நாட்டின் வடக்கே ரஷ்யாவும், தெற்கில் பர்மா, சயாம், லாவோஸ், வியட்னாம், ஆகிய சிறுநாடுகளும், கிழக்கில் திபேத்து ராஜ்யத்தையடுத்து இந்தியாவின் பகுதிகளாகிய காஷ்மீரும், வடகிழக்கு எல்லை ஏஜன் எலிப் பிரதேசமும், இந்தியப் பாதுகாப்புக்குள்ளிருக்கும் நேப்பாளம், சிக்கிம், பூட்டான் நாடுகளும் உள்ளன. இந்தியப் பகுதிகள் யாவும் இமயமால்வரைச் சாரல்களில் உள்ளவை. முக்கியமாகச் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நடுவே பூவுலகிலேயே மிகப்பெரிதான இமாலயமே எல்லையாக வானுற வளர்ந்து நிற்கின்றது. ஆசியாவில் சீனாவுக்கும் அடுத்த பெரிய நாடு இந்தியா தான். சீனவுக்கு வடகிழக்கில், அதனை அடுத்து, ஜப்பான் தீவுகள் அமைந்துள்ளன.

‘சீனா’ என்ற பெயரால் நாமும், மற்ற வெளிநாட்டாரும் அந்த நாட்டைக் குறிப்பிடுகிறாேம். ஒரு சமயம் அந்த நாட்டு மாகாணங்களில் ஒன்றான ‘சின்’ என்ற மாநிலம் மற்ற மாகாணங்களை யெல்லாம் வென்று ஒரு குடைக்கீழ்க் கொண்டு வந்தது. அந்தச் சின் மாகாணத்தின் பெயரையே உலகத்தார் நாட்டுக்கும் சூட்டி விட்டனர். ஆனால் சீனர்கள் தங்கள் நாட்டைச் ‘சுங்— குவோ’ என்பார்கள். இதன் பொருள் ‘நடு நாடு’ என்பது.

சீனா நீர்வளம், நிலவளம், உலோகக் கனிவளம் முதலிய வளங்களெல்லாம் அமைந்தது. காடுகளும், மலைகளும், சோலைகளும், ஏரிகளும் அங்கே நிறைந்துள்ளன. 1,600 ஆறுகள் அந் நாட்டின் வளத்தையும் எழிலையும் பெருக்கிப் பாய்ந்துகொண்டிருக்

115