பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 மென்ஷியஸ் போன்ற மாபெரும் ஞானிகள் சீன மண்ணில் தோன்றியவர்களே. இவர்களும் இவர்களுடைய சீடர்களும் மக்களின் வாழ்க்கையை உருவாக்கியவர்கள். ‘பேனா பிடிக்கத் தெரிந்தவன் பிச்சையெடுக்க வேண்டியிராது’ என்பது ஒரு சீனப் பழமொழி. ‘அறிவாளி தன் நூல்களை இழக்கமாட்டான்; ஏழை தன் பன்றிகளை இழக்கமாட்டான்’ என்று மக்கள் சொல்வார்கள். புத்தகங்கள் எழுதுவதும், பிரதி செய்வதும், கற்பதும் கற்பிப்பதும் அறிவாளர் செயல்கள். ஏழை மக்கள் உணவுக்காக ஏராளமான பன்றிகளை வளர்ப்பதும் அந்நாட்டு வழக்கம். அரசாங்க அலுவல்களுக்காகத் தேர்வுப் பரீட்சை செய்வதில், நன்றாகக் கவி பாடவும் தெரிந்திருக்க வேண்டுமென்று அங்கே விதிக்கப்பெற்றிருந்தது. எனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகச் சீன அதிகாரிகள் அனைவரும் படிப்பாளிகளாகவும், கவிவாணர்களாகவும் இருந்து வந்ததில் வியப்பில்லை. 150 வருடங்களுக்கு முன்னால் உலகில் மற்ற நாடுகள் அனைத்திலும் எத்தனை நூல்கள் இருந்தனவோ அவைகளைவிட அதிகமாக அந்த ஒரு நாட்டில் மட்டும் ஏடுகளும் புத்தகங்களும் இருந்தன. கல்வியைப் போலவே கலைகளிலும், தத்துவ ஞானத்திலும், இலக்கியத்திலும் சீனர்கள் தலைசிறந்து நின்றார்கள்.

தன் முதலாகக் காகிதம் செய்யக் கண்டுபிடித்தவர் சீனர். அச்சு இயந்திரம், திசை காட்டும் கருவி, காகித நாணயம், கப்பல் முதலியவை அமைக்கவும் அவர்களே முந்திக்கொண்டவர்கள். அவர்களே வெடி மருந்தையும் கண்டுபிடித்தார்கள்; ஆனால் அதை மக்களை அழிக்கும் கருவியாகப் பயன்படுத்தாமல், வாணங்களாகவும், வெடிகளாகவும் செய்து கொளுத்தி, அவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதே வெடி மருந்தை ஐரோப்பியர்கள் தெரிந்து

118