பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


கிழக்குப் பாகிஸ்தானைப்போல் ஐந்தரை மடங்கு பெரிது. எனினும், கி. பாகிஸ்தானிலேயே ஜனத்தொகை அதிகம். மேற்கில் 4 கோடிக்கு மேலும், கிழக்கில் 5 கோடிக்கு மேலும் மக்கள் வசித்து வரு கின்றனர். ஆட்சி முறைக்காக மே. பா. 10 டிவிஷன்களாகவும், கி. பா. 3 டிவிஷன்களாகவும் பிரிக்கப்பெற்றுள்ளன.

1947 முதல் இதுவரை பாகிஸ்தானில் நிலையான அரசாங்கம் ஏற்படவில்லை. அரசியலில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் வயது வந்த மக்கள் அனைவரும் வாக்குரிமை பெற்று, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையாக மூன்று பொதுத் தேர்தல்கள் அமைதியாக நடந்திருக்கின்றன. ஆனால் பாகிஸ்தானில் அவ்விதம் தேர்தலே நடைபெறவில்லை. மேலும், 1958 முதல் அங்கே இராணுவ ஆட்சி நிறுவப்பெற்று, சேனபதியான தளபதி முகம்மது அயூப் கான் தலைவராக இருந்து வந்தார். 1965-இல் மீண்டும் அவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் நிறுவப்பெற்றது முதல் அது பல இன்னல்களைக் கடந்துவர நேர்ந்தது. இந்தியாவைப் போலவே அதுவும் இலட்சக்கணக்கான அகதிகளுக்கு வாழ வழி செய்யவேண்டியிருந்தது. இரண்டு திசைகளில் இரு ராஜ்யங்களாக அமைந்திருப்பதால், இரண்டும் இணைந்து இயங்குவதில் இடையிடையே வேற்றுமைகள் தோன்றின. பாகிஸ்தானில் ஏராளமான பருத்தியும் சணலும் உற்பத்தியாகின்றன. ஆனல் அவைகளைப் பயன்படுத்தும் ஆலைகள் இந்தியாவில் இருக்கின்றன. பெருந்தொழில் வளர்ச்சிக்கும், விவசாய அபிவிருத்திக்கும் மிகுந்த மூலதனம் தேவை. ஆனால் செல்வத்தில் பெரும்பகுதி இந்தியாவிலுள்ளது. ஆயினும் அமெரிக்காவின் பொருளுதவியும், இராணு

9