பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 யில்லாத ஒரு தீமை என்று சீனர் கண்டு கொண்டனர்’ என்று ஒரு ஜப்பானிய அறிஞர் கூறியுள்ளார். எனவே, எந்த மன்னன் எப்படி ஆண்டுவந்தாலும், மக்கள் உலக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், தத்தம் நகரங்களிலும், கிராமங்களிலும் அமைதியாகக் காலங் கழித்துவந்தார்கள்.

ஐரோப்பியர் வருகை

ஆயினும் சென்ற ஒன்றரை நூற்றாண்டுக் காலத்தில் உலகத்தில் ஏற்பட்ட மாறுதல்களின் விளைவிலிருந்து சீனா தப்பியிருக்க முடியவில்லை. ஐரோப்பிய நாடுகளில் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் பெற்றுத் தொழில்களில் உற்பத்தியான பொருள்கள் மலை மலையாகக் குவிந்து வந்தன. இரயில்களும், நீராவிக் கப்பல்களும் தோன்றின. துப்பாக்கிகளும், பீரங்கிகளும் போர்களிலே பயன்படுத்தப் பெற்றன. அந்நிலையிலே வெளிநாடுகள் பலவற்றைப் பிடித்து ஆதிக்கியம் செலுத்தவும், வாணிபம் செய்யவும் போர்த்துகீசியர், டச்சுக் காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் முதலிய ஐரோப்பியர் ஆசிய, ஆப்பிரிகக் கண்டங்களுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களில் முன்னேடிகளாக வந்தவர்கள் கிறிஸ்தவப் பாதிரிமார்கள். அவர்கள் விவிலிய வேதப் புத்தகத்தைத் துக்கிக்கொண்டு வந்து பிரசாரம் செய்யத் தொடங்கியபின், வேத நூலைத் தொடர்ந்து வெடி மருந்துக் கப்பல்களும் கீழ்த் திசை நோக்கி வரத் தொடங்கின.

ஐரோப்பியர் சீனாவுக்குள் வந்த காலத்தில் மஞ்சூ வமிசத்தினரே ஆண்டுவந்தனர். இறுதிக் காலத்தில் அவர்கள் மிகவும் திறமையற்று விளங்கினர்கள். மந்திரிகளும், அதிகாரிகளும் பரிதானம் வாங்கிக் கொழுத்திருந்தார்கள். மக்கள் மட்டும் துயரமும், கொடுமை

121