பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 அமைக்கப்பெற்றது. கோமிண்டாங் இந்திய தேசியக் காங்கிரஸைப் போன்றது.

பின்னர், அரசாங்கத்திற்கு ராணுவ உதவியும், பல கட்சிகளின் ஆதரவும் இருக்கவேண்டும் என்பதற்காக ஸன் யாட்-ஸென், பழைய சேனாதிபதியான யுவான் ஷி-காய் என்பவரைத் தம் பதவியில் அமர்த்தி வைத்தார். 11-3-1912-இல் சீனக் குடியரசு நிறுவப் பெற்றது. தலைவர் யுவான் பேராசையும், பெரும் பதவி மோகமும் கொண்டவர். 1916 வரை டாக்டர் லென் அவரையும் எதிர்த்துப் போராடி வெல்ல வேண்டியிருந்தது. அந்த ஆண்டிலே யுவானும் காலமானர். அவர் இறக்கு முன்பு நூறு நாட்கள் தாமே ‘மன்னர்’ என்றும் பட்டம் சூட்டிக் கொண்டிருந்தார். இது மட்டுமன்று, முடி துறந்த பழைய சக்கரவர்த்தியை மறுபடி அரியணையேற்றி வைக்கவும் சிலர் வீணாக முயன்றனர்.

சீன மக்களுக்காக டாக்டர் ஸென் போற்றி வந்த தத்துவங்கள் மூன்று. அவை மக்களின் சுதந்தரமான தேசியம், மக்களின் ஆட்சியான ஜனகாயகம், மக்களின் வாழ்க்கை வசதியான லோஷலிஸம். இந்தத் தேசியம், ஜனநாயகம், ஸோஷலிஸம் ஆகிய மும்மைத் தத்துவங்களைப் பற்றி அவர் ஒரு நூல் எழுதி வெளியிட்டதுடன், பல பொதுக் கூட்டங்களிலும் அவற்றை விளக்கிப் பேசியிருந்தார். பின்னல் 25 ஆண்டுக் காலத்தில், நாட்டில் யார் எது பேசினலும் ஸன் யாட்-ஸென்னின் ‘மும்மைத் தத்துவங்க’ளை ஆதரித்துப் பேசினால்தான் மக்கள் செவிசாய்த்துக் கேட்பார்கள். அறிவாளரிடையிலும், மக்களிடையிலும் அவை அவ்வளவு ஊறிப் போயிருந்தன.

முதல் தத்துவமான தேசியம் : சீன நாடு பரிபூரண சுதந்தரமுள்ளது, மற்ற எந்தச் சுதந்தர நாட்டுக்கும்

125