பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வத் தளவாட உதவியும்கொண்டு, பாகிஸ்தான் ஒரளவு வல்லமையுடன் விளங்குகின்றது. நாட்டின் வளர்ச்சிக்கு வேண்டிய தொழில்களின் அபிவிருத்தியைக் காட்டிலும், அமெரிக்கா முதலிய நாடுகளிலிருந்து போர்க் கருவிகளை வாங்கிக் குவித்துக் கொள்வதிலேயே பாகிஸ்தான் அரசாங்கம் கவனமாயிருந்து வருகிறது. மக்கள் பொருளாதார நிலையில் மேலோங்கிச் செழிப்புடன் வாழ்க்கை நடத்துவதற்கு இனிப் பல்லாண்டுகள் பாடுபட்டால்தான் முடியும்.

காஷ்மீர்

இந்தியாவின் வடகோடி ராஜ்யமாகவுள்ளது காஷ்மீர். இதன் பரப்பு சுமார் லட்சம் சதுரமைல். இது ஜம்மு, காஷ்மீர் என்ற இரு பகுதிகளைக் கொண்டது. காஷ்மீர் வெகு காலமாக ஒரு தனிச் சமஸ்தானமாக இருந்தது. 40 லட்சத்திற்கு மேற்பட்ட அதன் ஜனத்தொகையில் முக்கால் பகுதியினர் முஸ்லிம்கள்; கால் பகுதியினர் இந்துக்கள். இந்து மன்னர் ஒருவர் அதை ஆண்டு வந்தார். 1947 ஆகஸ்ட் 15-ந் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்தரம் பெற்றபின், அக்டோபர் மாதத்தில் மலைவாசிகளான பாகிஸ்தானிகள் திடீரென்று காஷ்மீர் மீது படையெடுத்தார்கள், பின்னர் பாகிஸ்தானின் படைகளும் அவர்களுடன் சேர்ந்து தாக்கி வந்தன. இடையில் காஷ்மீர் மகாராஜா இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடினர். அக்டோபர் 26ந் தேதி அவர் காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்து கொள்ள இசைவதாக உறுதிப்பத்திரத்தில் கையெழுத்திட்டார். அன்றே காஷ்மீருக்கு உதவியாக அதன் தலைநகரான பூரீநகருக்குத் தன் படைகளை அனுப்ப இந்திய அரசாங்கம் தீர்மானித்தது. காஷ்மீர் செல்வதற்குப் பாதைகள் சரியாயில்லாததால், விமானங்

10