பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ருக்கு உதவியாயின. கோடிக்கணக்கான இரும்பும் நிலக்கரியும் கிடைக்கக்கூடிய சுரங்கங்களும் அவர்களுக்குக் கிடைத்துவிட்டன. ஜப்பான் இத்துடன் நிற்காமல், சீன நாட்டுக்குள்ளேயும் சிறிது சிறிதாகப் புகுந்து, பெரும் போருக்குரிய வாய்ப்பை எதிர்பார்த்திருந்தது.

1930-இலிருந்தே கியாங்ஸி மாகாணத்தில் கம்யூனிஸ்டுகள் ஒரு ஸோவியத் அரசாங்கத்தை நிறுவி, அதற்குப் படை வீரர்களையும் சேர்த்து வந்தனர். அவர்களுடைய படையில் லட்சத்திற்கு மேற்பட்ட செஞ்சேனை வீரர்கள் இருந்தனர். அந்தப் படையை எதிர்த்துச் சியாங் கை-ஷேக் பன்முறை போராடி வந் தார். 1934-இல் கடைசியாகக் கியாங்ஸி மாகாணத் தைச் சியாங் முற்றுகையிட்டார். அந்நிலையில் கம்யூ னிஸ்டுப் படையினரும், தலைவர்களும் அந்த மாகாணத்தை விட்டே வெளியேறி, வடதிசை நோக்கிக் கால்நடையாகப் புறப்பட்டுவிட்டனர். அவர்கள் ஓராண்டுக்காலம் நடந்து சென்று, ஷென்ஸி மாகாணத்தில் யேனான் நகரில் குடியேறினர்.

1937-இல் ஜப்பான் போருக்குரிய விரிவான திட்டத்துடன், ஜூலை 7-ந்தேதி சீனவில் முதல் சண்டையைத் தொடங்கிவிட்டது. இரண்டாவது உலகப் போரை ஹிட்லர் 1939-இல்தான் தொடங்கினர். ஆனால் ஜப்பானியப் போர் ஈராண்டுகட்கு முன்னரே தொடங்கிவிட்டது. 1945-இல் உலகப் போர் முடியும் போதுதான் அதுவும் முடிவுற்றது.

எட்டு ஆண்டுகளாக நடந்த அந்தப் போரின் கொடுமைகள் பலப்பல. நாட்டில் பாதிக்கு மேல் அந்நியர் வசமாகிவிட்டது. லட்சக் கணக்கான மக்களும் படைவீரர்களும் மடிந்து மண்ணுள் மறைந்துவிட்டனர். ஆயினும் அதிலே கோமிண்டாங் கட்சியினரும்

130