பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சீனக் கம்யூனிஸம்

அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குக் கீழ்த்திசையில் கம்யூனிஸம் பரவிவிடக் கூடாதேயென்ற கவலை எப்பொழுதும் உண்டு. சீனக் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கையும், படை வலிமையையும், போர்த்திறனையும் கண்டு, அவர்களை எதிர்ப்பதற்காக அது சியாங் தலைமையில் கோமிண்டாங் கட்சிக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து உதவி வந்தது. போரில் மஞ்சூரியாவில் வெற்றி கொண்ட ரஷ்யா அதைத் தன் பாதுகாப்பில் வைத்திருந்தது. போர் நின்றவுடன் அது அந்நாட்டைச் சியாங் கை-ஷேக்கிடமே ஒப்படைத்து விட்டது. சீனக் கம்யூனிஸ்டுகளை விட சியாங்கே நாட்டைக் கட்டியாள முடியுமென்று அப்போது ஸோவியத் சர்வாதிகாரியாயிருந்த ஸ்டாலினும் கருதியது வியப்பான செய்தியாகும். ஆனால் மஞ்சூரியாவைச் சியாங்குக்குக் கொடுத்த மார்ஷல் ஸ்டாலின், ஜப்பானியரிடமிருந்து கைப்பற்றியிருந்த ஏராளமான ஆயுதங்களையும் தளவாடங்களையும் கம்யூனிஸ்டுக் கட்சிக்குத் தாராளமாகக் கொடுத்துதவினர்.

அளவுக்கதிகமான ஆயுதங்களைப் பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் கோமிண்டாங்கை எதிர்த்தனர். கடுமையான உள்நாட்டுப் போர் தொடங்கிவிட்டது. கோமிண்டாங்குக்கு அமெரிக்கா பொருளையும் போர்க்கருவிகளையும் வாரி வழங்கிக் கொண்டேயிருந்தது. கோமிண்டாங் கட்சிக்கு மக்களின் ஆதரவு குறைந்துகொண்டே வந்ததையும், ஆட்சியிலும், படைவீரர்களிடையிலும் ஊழல்கள் மலிந்திருப்பதையும் கண்ட தளபதி மார்ஷல் முதலிய தளபதிகள் சொல்லியும் கூட, அமெரிக்கா தன் உதவியை நிறுத்த வில்லை.

கீழ்த் திசையில் கம்யூனிஸத்தை வளரவிடாமல்

132